விந்து அதிகரிக்க:போதை பொருட்கள்:
போதை பொருட்களான சிகரெட், மதுபானங்கள் மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பொருட்கள் மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதோடு, விந்தணு உற்பத்தியை குறைக்கவும் செய்கிறது என ஆய்வாளர்கள் கருத்து. இவை தவிர்த்தால் ஆரோக்கியத்தோடு, விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்.
சுத்தமான ஆடை:
ஆண்மைக்கு முக்கிய காரணமான ஆணுறுப்பை மிகவும் அழுத்தும்படியான உள்ளாடைகளை உபயோகிப்பது கூடாது. இந்த உறுப்பு சூரிய ஒளியே படாத இடம் என்பதால் தொற்றுநோய் ஏற்படும் பல் இன்னல் உள்ளது. இதனால் சுத்தமான, வெயிலில் காயவைக்கப்பட்ட உள்ளாடைகளை உபயோகிக்க வேண்டும். அதோடு சற்று இதமான பருத்தி ஆடையாகவும், காற்றோட்டம் மிக்கதாகவும் அது இருந்தால் சிறந்தது. வெப்பமான அறையில் வசித்தால் விந்தணு உற்பத்தி குறையும்.
.
சைக்கிள்
சைக்கிள் ஓட்டுவதால் விந்தணு உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. நாம் சைக்கிளின் இருக்கையில் அமரும்போது, இருக்கையின் முன் பகுதி, நம் விந்துப்பையை அழுத்துவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பேருந்து அல்லது காரில் பயணிக்கலாம்.
ஹாட் டப்
சூடான தண்ணீர் உள்ள டப்பிள் நாம் இறங்கி குளிக்கும் போது, நமது விந்துப்பை பாதிக்கப்படுகிறது. அதிக சூடான இடங்களிலோ, அல்லது சூடான தண்ணீரோ ஆணுறுப்பை பாதிக்கக்கூடும்.
மன அழுத்தம்
விந்தணுக்கள் குறைவதற்கு மன அழுத்தமும் காரணமாக கருதப்படுகிறது. நாம் மிகவும் மன அழுத்ததுடன் காணப்படும் பொழுது, நம் உடலின் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படுகிறது. மனம் அல்லது உடல் உலைச்சலினால் விந்தணுக்கள் குறையும் அபாயம் உள்ளது. எனவே கோபத்தை அடக்குங்கள், மன அமைதியை பெறும் வகையில் யோகா செய்யலாம்.
எடை
ஒருவரின் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது மிகவும் குறைவாக இருந்தாலோ ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அதிகளவு ஈஸ்ட்ரோஜன் அல்லது குறைந்தளவு டெஸ்டோஸ்டீரான் உருவாகி விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. எடை குறைத்தல் அல்லது கூட்டுதலுக்கு ஜிம்முக்கு சென்றாலும் எளிமையான உடற்பயிற்சி செய்வது அவசியம்.
ஊக்கமருந்துகள்
ஊக்க மருந்துகள் அல்லது வலி நிவாரண மருந்துகளால் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுவின் வேகம் குறைகிறது. ஊக்கமருந்துகள் பயன்படுத்தும் போது ஆணின் விதைப்பை தசைகளை சுறுங்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் தேவையில்லா வலி நிவாரணி, ஊக்கமருந்துகளை பயன்படுத்துவது தவறு.
ஓய்வு
மனிதனின் வரப்பிரசாதம் ஓய்வு, தூக்கம். நாம் தினமும் இரவும் 8 மணி நேரம் நல்ல உறக்கத்தை எடுத்துக்கொண்டால் அது உடலை புத்துணர்ச்சி அளிப்பதோடு, இது விந்தணுக்களின் உற்பத்தியை மிக அவசியமானது.
தியானம், யோகா
தினமும் மனதை அமைதி, உற்சாகப்படுத்தும் விதமாக தியானம், யோகா ஆகியவற்றை செய்யும் பொழுது உடல் தசைகள் தளர்ந்து, வலுவடைகிறது.
உடலுறவின் போது லூப்ரிகண்டுகள் உபயோகப்படுத்துவது தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் காரியம். லூப்ரிகண்டுகளோ அல்லது எச்சில், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துவதால் உடலுறவு சவுகரியமாக இருக்கும் என்பது பொய். அப்படி தேவை ஏற்பட்டால் கடலை எண்ணை, இயற்கையான எண்ணைகளை பயன்படுத்தலாம்.
வேதிப்பொருட்கள்
ஆரோக்கியமான உடல் நிலைக்கும், விந்தணுக்கள் பெறுவதற்கும் நல்ல சூழ்நிலையே காரணம். வேதிப்பொருட்களுடன் வேலைபார்க்கும் போது அது நமது விந்தணுக்களை பாதிக்கின்றது. வேதிப்பொருட்களை கையாளும் போது, கையுறை, முகமுடி ஆகியவற்றை தவறாது பயன்படுத்துங்கள். மருத்துவரை அணுகி உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
குழந்தை பரிசு
நாம் மேற்கூரிய வாழ்க்கை முறைகளை கையாண்டால் நமது உடலை ஆரோக்கியத்தோடு, விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதன் பலனாக நமக்கு குழதை எனும் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.