பெண்களின் அந்தரங்கம்:இந்த உலகிலேயே இன்று வரை ஒரு மெக்கானிசம் குறித்து இன்றளவில் மனிதனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, தோண்ட, தோண்ட முடிவிலியாய் அது தொடர்ந்துக் கொண்டே போகிறது என்றால், அது மனித உடல் தான்.
இன்று மருத்துவத்தில் நாம் எத்தனை பெரிய கண்டுப்பிடிப்பை எட்டிப் பிடித்தாலும், அது முதல் படியின் மிக அருகாமையாக தான் இருக்கிறதே தவிர, நாம் இன்னும் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு எல்லையை அடைந்துவிடவில்லை.
அந்த வகையில் ஆணோ, பெண்ணோ.. யாராக இருந்தாலும் அந்த உயிரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்யும் நுழைவாயில், மனிதனின் கர்ப்பக்கிரகம் பெண்ணுறுப்பு குறித்து இதுநாள் வரை நாம் பரிதாக அறிந்திராத சில தகவல்கள் மற்றும் மருத்துவ உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…
இரண்டு மடங்கு! உணர்ச்சி தூண்டிவிடப் படாத நிலையில் வஜைனா எனப்படும் பெண்ணுறுப்பானது மூன்றில் இருந்து நான்கு செ.மீ அளவு ஆழம் கொண்டிருக்கும். ஆனால், உடலுறவில் ஈடுபடும் இது இந்த அளவானது இரண்டு மடங்கு வரை பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதை ஆங்கிலத்தில் வஜைனா டெண்டிங் என்று குறிப்பிடுகிறார்கள். powered by Rubicon Project இப்படியாக இரண்டு மடங்கு பெரிதாகும் போது, விந்தணுவானது கருப்பை வாயை எளிதாக அடையும், கருத்தரிக்கும் வாய்ப்பும் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கன்னித்திரை! Hymen என்பது வஜைனாவில் இருக்கும் ஒரு பகுதி. இதை கன்னித்திரை என்று அழைக்கிறோம். இதை வைத்து ஒரு பெண் கற்புடையவள் என்று அறியலாம். முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இந்த கன்னித்திரையில் கிழிசல் ஏற்பட்டு இரத்தக்கசிவு உண்டாக வாய்ப்புண்டு. ஆனால், இதை வைத்து மட்டும் ஒரு பெண்ணின் கற்பை சந்தேகித்து விட முடியாது. விளையாட்டு, நடனம், ஜிம்னாஸ்டிக், சைக்ளிங், கால்களை நன்கு ஸ்ட்ரெச் செய்யும் வேறு பிற வேலைகள் செய்து வந்தாலும் கூட இந்த கன்னித்திரையில் கிழிசல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
இல்லாது… ஆனால், எல்லா பெண்களும் இந்த ஹைமன் எனும் கன்னித்திரையுடன் தான் பிறக்கிறார்களா? என்றால். இல்லை என்பதே விடை. ஆம்! எல்லா பெண்களுக்கும் இந்த கன்னித்திரை இருப்பதில்லை. அரிய வகையில் சில பெண்கள் கன்னித்திரை இன்றியும் வாழ்ந்து வருகிறார்கள். இது அவர்களுக்கே தெரியாது. மேலும், கன்னித்திரை எல்லா பெண்கள் மத்தியிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு அது கடினமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
கிளிட்டோரிஸ்! முதலில் எல்லா பெண்களின் பெண்ணுறுப்பும் ஒரே மாதிரியான அளவில் அல்லது வடிவத்தில் இருக்காது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். ஜெர்னல் ஆப் செக்ஸுவல் மெடிசன் என்ற ஆய்வு பத்திரக்கையில் வெளியான தகவலில், செக்ஸ் என்று வரும் போது, அதற்கு சைஸ் பெரும் கருது பொருளாக இருப்பதில்லை என்று தெரிவித்திருந்தனர்.
உச்சக்கட்ட இன்பம்! ஆணுறுப்பு மட்டுமின்றி, பெண்ணுறுப்புக்கும் இது பொருந்தும். ஆம்! முப்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியல் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், பெண்களின் பிறப்புறுப்பின் ஒரு அங்கமான கிளிட்டோரிஸ் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களது வடிவம், அளவு மற்றும் அது சார்ந்து அவர்களது உச்சக்கட்ட இன்பம் எப்படி அமைகிறது என்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், உச்சக்கட்ட இன்பம் காண்பதை சிரமாமாக இருப்பதாய் கூறிய பெண்களை ஆய்வு செய்த போது, அவர்கள் அனைவரின் கிளிட்டோரிஸ் பகுதியும் வஜைனா திறப்பு பகுதியில் இருக்கும் மிக தூரமாக இருந்தது அறியவந்தது.
சிறியதாக! செக்ஸ் என்று மட்டுமின்றி கிளிட்டோரிஸ் பகுதி சிறியதாக இருக்கும் பெண்கள் செக்ஸ் டாய்ஸ் கொண்டு முயற்சித்தாலும் உச்சக்கட்ட இன்பம் அடைவதில் சிரமம் இருப்பதை அறிய முடிந்தது. வஜைனா மற்றும் கிளிட்டோரிஸ் இடையே முப்பது சதவிதம் இடைவேளை அதிகம் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த தொந்தரவு இருப்பது அறியப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் எளிதில் உச்சக்கட்ட இன்பம் அடைய உதவுவது கிளிட்டோரிஸ் தான் என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தகவலாகும்.
தளர்ச்சி! நமக்கு இயல்பாக மனத் தளர்ச்சி ஏற்படுவது அறிவோம். ஆனால், வஜைனாவும் தளர்ச்சி அடையும் என்று நீங்கள் அறிவீர்களா? இது உண்மை மற்றும் மிகவும் வலி மிகுந்த ஒன்றாகும். இதை மருத்துவத்தில் “Vulvodynia” என்று குறிப்பிடுகிறார்கள். எல்லா வயது பிரிவினை சார்ந்த பெண்களுக்கும் இந்த தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இது அந்த இடத்தில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஏதோ குத்துவது போன்ற வலியை உண்டாக்கும். ஆனால், இது ஏற்பட்டிருப்பதற்கான இன்பெக்ஷன் போன்றோ, அல்லது சருமத்திலோ எந்தவொரு அறிகுறியும் இருக்காது.
வுல்வோதினியா “Vulvodynia” தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிந்துக் கொள்ளலாம் என்று NHS வெளியிட்ட குறிப்புகள்: * எரிச்சல் அல்லது குத்துவது, புண் தென்படுதல் * கீழே உட்காரும் போது மோசமான உணர்வு வெளிப்படும். * புட்டம் மற்றும் தொடைகளில் எரிச்சல், இன்பெக்ஷன் போன்ற தாக்கம் உண்டாகி இருக்கலாம். * செக்ஸ் அல்லது அந்த இடத்தை தீண்டும் போது, Tampon போன்ற உபகரணம் பயன்படுத்தும் போது வலி ஏற்படும். மெதுவாக தொடும் போது செக்ஸ் கொள்ளும் போது, Tampon பயன்படுத்தும் போது கூட பெரியளவில் வலி உண்டாகும். நீண்ட காலம் இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், செக்ஸில் ஈடுபடும் போது மோசமான வலி உணர்வார்கள்.
உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால்… செக்ஸில் சீராக ஈடுபடமால் இருந்தால் வஜைனால் சுவர்கள் தடிமனாகவும், வறட்சியாகவும் ஆகிவிடும். இதனால், வஜைனா பகுதியில் அரிப்பு அல்லது எரிச்சல் உண்டாகலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த பிரச்சனை எந்த வயதினை சார்ந்தே பெண்ணுக்கும் உண்டாகலாம். முக்கியமாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இது அதிகம் தென்படும்.
சுரப்பி! ஏனெனில், உடலுறவில் ஈடுபடாத காலங்களில் உடலில் oestrogen இயல்பு நிலையை காட்டிலும் குறைவாக தான் வெளிப்படுமாம். இதனால், வஜைனால் சுவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகுமாம். எனவே, சீரான இடைவேளையில் உடலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம் என்கிறார்கள்.
வஜைனால் அட்ரோபி! Vaginal Atrophy எனக் கூறப்படும் இதற்கான அறிகுறிகள்… * வறட்சி * அரிச்சல் உணர்வு, முக்கியமாக சிறுநீர் கழிக்கும் போது. * அரிப்பு * செக்ஸில் ஈடுபடும் போது வறட்சியான உணர்வு * அவசரமாக சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு * UTIதொற்று * செக்ஸில் ஈடுபடும் போது இரத்தம் கசிதல் * உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியம் * பெண்ணுறுப்பு இறுக்கமானது போல உணர்வு
தொலைய வாய்ப்புகள்? பெண்ணுறுப்புக்குள் விழுந்துவிடும் / தவறுதலாக நுழைந்துவிடும் பொருட்கள் காணாமல் போக வாய்ப்புகள் இருக்கிறதா? சுய இன்பம் காணும் போது, வினோதமான பொருட்களை செக்ஸ் டாய்ஸாக பயன்படுத்தும் போது அந்த பொருட்கள் பெண்ணுறுப்புக்குள் விழுந்திட / உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் உண்டு. இப்படியான கேஸ்கள் நிறையவே மருத்துவர்கள் கண்டிருக்கிறார்கள்.
சிகிச்சை மூலம்… ஆனால், அது எடுக்க முடியாமல் பெண்ணுறுப்புக்குள் தொலைந்துவிடுமா என்றால் இல்லை. பெண்ணுறுப்புக்குள் மேல் இருக்கும் பாகம் கருப்பை வாய். அதனுள் ஆணின் விந்தணு மட்டுமே நுழைய முடியும். அந்த அளவு மட்டும் தான் ஓபனிங் இருக்கும். எனவே, தவறுதலாக உள்ளே விழுந்த பொருள் எதுவாக இருந்தாலும், அதை சிகிச்சை மூலம் மீண்டும் வெளியே எடுத்துவிட முடியும்.
விழுந்துவிடலாம்… Utero-vaginal prolapse என்பது, வஜைனா, கருப்பை வாய் வெளியே விழும் நிலையை குறிக்கிறது. இது கேட்க கொஞ்சம் கொடூரமாக தான் இருக்கும். மேலும் இது வலி மிகுந்த ஒன்று. இதன் மூலம் கரு வெளியே வருவதற்கு எல்லாம் சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்விக் ஆர்கன் ப்ரோலாப்ஸ்! Pelvic organ prolapseக்கு சில அறிகுறிகள் இருக்கின்றன… * இடுப்பு / அடிவயிற்றில் / பெண்ணுறுப்பு பகுதியில் கடினமான உணர்வு * பெண்ணுறுப்புக்குள் ஏதோ இழுப்பது போன்ற அசௌகரியமான உணர்வு ஏற்படுவது * பெண்ணுறுப்பில் இருந்து ஏதோ வெளிவருவது போன்ற உணர்வு தென்படுவது அல்லது ஏதோ சிறிய பந்தின் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு இருப்பது * வஜைனா பகுதியில் ஏதோ வீக்கம் போன்று தென்படுவது அல்லது வீங்கி இருப்பது போன்ற உணர்வு * உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியம் அல்லது உணர்ச்சியற்று இருப்பது. * சிறுநீர் கழிக்கும் போது பிரச்சனை, உதாரணமாக முழுவதுமாக சிறுநீர் களிததது போன்ற உணர்வு இருக்காது. அடிக்கடி பாத்ரூம் செல்வீர்கள், தும்மல், இருமல், உடற்பயிற்சியின் போது சிறுநீர் கசிதல் ஏற்படும்.