சூடான செய்திகள்:எக்காரணம் கொண்டும் கல்யாணம் மட்டும் அவசரப்பட்டு பண்ணிடாதீங்க. நான் வயச மட்டும் குறிப்பிட்டு சொல்லல. இதுல ஆசையும் கலந்திருக்கு. ஒரு வயச கடந்து வந்திட்டா, இனி மாப்ள கிடைக்காது, ஊருல என்ன பேசுவாங்கன்னு, உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி தூண்டுவாங்க.
நமக்கும் ஒருக்கட்டத்துல அந்த பயம் வந்திட்டா, ஒரு வேலை துணை கிடைக்காதோங்கிற அச்சத்துல அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்க ஒகே சொல்லிடுவோம். எந்த வயசுல கல்யாணம் பண்றோம்கிறத தாண்டி, யார கல்யாணம் பண்றோம், அவங்க பின்னணி என்ன?னு தெரிஞ்சுக்கணும்.
இங்க நான் பின்னணினு சொல்றது பணம், காசு, அந்தஸ்து இல்ல. அவங்க கேரக்டர், குடும்பம் எப்படி? குணாதியங்கள் எப்படியானதுங்கிறத பத்தி. கல்யாணத்துக்கு பையன் நல்லா இருக்கணும், நாலு காசு சம்பாதிக்கணும் அது போதாதான்னு நெனச்சு இறங்கினா, பிரச்சன உங்களுக்கு மட்டுமில்ல, உங்க குழந்தைளையும் சும்மா விடாது.
வெளிவர வேற வழியா இல்லாத ஒரு பெரிய பிரச்சனைக்குள்ள நான் இன்னிக்கி சிக்கி தவிக்க முழுக் காரணம்… 27 வயசுல நான் அவசரப்பட்டு எடுத்த முடிவு தான்…
வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள்…
என் அப்பா அம்மா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அவங்க ரெண்டு பேரயும், ரெண்டு பேத்து வீட்டுலயும் ஏத்துக்கல. அதனால, அவங்க வேற ஊருக்கு வந்து வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாங்க. எங்க அப்பா கடின உழைப்பாளி. அதே சமயத்துல சுதந்திரம் எந்த அளவுக்கு நம்ம வளர்ச்சிக்கு முக்கியம்னு தெரிஞ்சவர்.
சுதந்திரம்! எனக்கு பேசி, விளையாட ஒரே துணைனா அது என் தம்பி தான். காதல் கல்யாணம், வீட்ட விட்டு ஓடி வந்தவங்கங்கிற அவப்பெயர் காரணமா, சொந்தக் காரங்க யாரையும் நான் பார்த்தது கூட இல்லை. ஆனா, ஒன்னு… மத்தவங்கள விட நல்ல அப்பா, அம்மா எனக்கு கிடைச்சாங்க. படிக்கிறதுல இருந்து, வாழ்க்கையில எடுக்குற முடிவு வரைக்கும் எல்லாத்துலயும் சுதந்திரம் கொடுத்தாரு அப்பா.
கல்வி! பிறந்து, வளர்ந்தது டவுன் மாதிரியான இடமா இருந்தாலும், படிப்புல நானும், என் தம்பியும் ரொம்ப கெட்டி. நான் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணி எம்.என்.சி கம்பெனியில வேலைக்கு போக ஆரம்பிச்சேன். என் தம்பி வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருக்கான். ரொம்ப சீக்கிரமே அவன் பெரிய அளவுக்கு வளர்ந்துட்டான். இன்னிக்கி வரைக்கும் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவின்னு எதுவும் கேட்டுக்கிட்டதே இல்ல.
விருப்பம்! எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாம, எல்லாம் இல்ல. என்னோட வேலையில இருந்த பிஸினால கல்யாணம் பத்தி பெருசா யோசிக்கல. அப்பறம் நானே ஆன்லைன்ல ரெஜிஸ்டர் பண்ணி ஒருத்தர தேர்வு பண்ணேன். என்ஜினியரிங் முடிச்சு, எம்.பி.எ பண்ண மாப்ள. நல்ல சேலரி. இதுக்கு மேல என்ன வேணும்… அம்மா கிட்ட காமிச்சேன். அவங்களுக்கும் பிடிச்சது. உடனே நிச்சயம் பண்ண பேச ஆரம்பிச்சோம்.
நான்கே மாதத்தில்! நான் அவர ஆன்லைன்ல பார்த்த முதல் நாள்ல இருந்து கணக்கெடுத்தா சரியா, நாலாவது மாசம் எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருந்தது. கல்யாணத்துக்கு அப்பறம் மும்பை போக வேண்டிய கட்டாயம். அவர வர்க் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அதுக்கு முன்னாடி, அவரோட சொந்த ஊருக்கு ஒரு தடவ போயிட்டு, சொந்த காரங்களா எல்லாம் பார்த்துட்டு வந்திடலாம்னு சொன்னாரு.
15 நாள்! அந்த ஏரியாவுல 15 நாள் இருக்க வேண்டிய சூழல். மாமியார் எங்க செக்ஸ் வாழ்க்கை பத்தி பச்சயா பேசினாங்க. இப்படி எல்லாமா ஒருத்தவங்க கேள்வி கேட்பாங்கன்னு நொந்து போனேன். ஒருவழியா அந்த ரெண்டு வாரம் கழிச்சு நாங்க மும்பைக்கு ஷிப்ட் ஆனோம். எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்ப தான், ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுச்சு.
மாமியார்! எங்கள பார்த்துக்கு வரேன்னு சொல்லி மாமியார் மும்பைக்கு வந்தாங்க. ஆனா, வேலை பண்ணினது முழுக்க நான் தான். ஆபீஸ்கும் போயிட்டு வந்துட்டு, காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நான் தான் எல்லாமே சமைக்கணும், துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும். அவங்க வெறுமென சாப்பிட்டுட்டு தூங்குவாங்க.
மகள்! அந்த காலக்கட்டத்துல தான் நான் கன்சீவ் ஆனேன். அழகான மகள் பிறந்தா… மகள் பிறந்ததுக்கு அப்பறம் ஒரு விடிவு காலம் வரும்னு நெனச்சேன் அதுவும் நடக்கல. பச்ச உடம்பு காரின்னு கூட பார்க்காம என்னையே வேலை பண்ண வெச்சாங்க. இதுமட்டும் இல்லாம, வருஷா, வருஷம் ரெண்டு மாசம் முழுக்க என் வீட்டுக்காரர் தங்கச்சி குடும்பத்தோட சுற்றுலா வர மாதிரி மும்பைக்கு வந்திடுவாங்க.
செலவு! அவங்க வந்து தங்கி, ஊற சுத்தி பார்க்கிறது மட்டுமில்லாம, ட்ராவல் பண்றதுல இருந்து அவங்க ஊருல வாங்குற பொருள், ஊருக்கு திரும்பி போகும் போது கொடுக்குற கிப்ட்னு ஏகப்பட்ட செலவு. அந்த ரெண்டு மாசத்துல ரெண்டு இலட்சமாவது செலவாகும். என் வீட்டுக்காரருக்கு அதுல எல்லாம் எந்தவொரு பிரச்சனையும் இல்ல. என் தங்கச்சி, நான் பண்றேன்.. உனக்கு எதுவும் பேச உரிமை இல்லன்னு சொல்லுவாரு.
பார்ன்! பொருளாதார ரீதியான சிக்கல் ஒருபக்கம் இருந்தா.. மறுபக்கம் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனை அதிகரிக்க ஆரம்பிச்சது. பார்ன் படங்கள எல்லாம் பார்த்துட்டு அதுல வர மாதிரியே என்னையும் பண்ண சொன்னாரு. அதெல்லாம் என்னால சகிச்சிக்க முடியல. ரெண்டு பொண்ணு பிறந்த பின்ன தான் அவரோட ஆட்டம் அதிகமாக ஆரம்பிச்சது.
குடி! பார்ன் மட்டும் இல்லாம குடியும் அதிகமாச்சு. தினமும் குடிச்சுட்டு வந்து உடல் ரீதியா என்ன கொடுமை பண்ண ஆரம்பிச்சாரு. ஏதாவது எதிர்த்து பேசினா, 2 பெண் குழந்தைங்க இருக்க வீட்டுல, அவங்க அப்பாவ போலவே வெறும் உள்ளாடையோட நடக்க ஆரம்பிச்சிடுவாரு. ஒருக்கட்டத்துல என் தம்பிக்கு இதெல்லாம் தெரிய வந்துச்சு. ஆனா, நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை தானே. நீ தான் மேனேஜ் பண்ணிக்கணும்னு சொல்லிட்டான்.
வேறுவழி இல்லை! விவாகரத்து பண்ணிட்டு தனியா வந்திடலாம்னா, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் அவர் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. என் பொண்ணுங்க இல்லாம என்னால வாழ முடியாது. என் அம்மாவும் தம்பியோக தங்கி இருக்கிறதால ஒரு உதவியும் பண்ண முடியாத சூழல்ல இருக்காங்க.
விவாகரத்தும் பண்ண முடியாம, ஆறுதலா நாலு வார்த்தை பேச கூட நாதி இல்லாம தவிக்கிறேன்