Home ஆண்கள் தினமும் இதை சாப்பிடல் ஆண்மை இரண்டு மடங்கு பெருகும்

தினமும் இதை சாப்பிடல் ஆண்மை இரண்டு மடங்கு பெருகும்

1088

ஆண்மை பலம் பெற:இன்று பல இளம்தம்பதியினரின் விவாகரத்திற்கு காரணமாக இருப்பது ஆண்மை குறைவு, குழந்தை இன்மை போன்ற காரணங்கள்தான். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் உண்ணும் உணவுகள், நமது அன்றாட வாழ்க்கை முறையும் நமது ஆண்மைக்கு வேட்டுவைக்கும் முக்கிய காரணிகளாக செயல்படுகிறது.

இதை எப்படி சரிசெய்வது? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து கண்டகண்ட பொருட்களை வாங்கி உண்பதை விட வெறும் ஐந்து ரூபாயில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வாழைப்பழம் உங்களுக்கு எளிய தீர்வை வழங்குகிறது.

முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ் கலாசாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தை படைக்கிறோம். திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியே இது.

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. இதனால் நீங்கள் அதிக பலம் கொண்டு தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட முடியும். விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் எனும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

மலச் சிக்கலுக்கு வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.