பொது மருத்துவ தகவல்:பருக்கள் என்பது இருபாலருக்கும் உள்ள பொதுவான் சருமப் பிரச்சினை. இது முகத்தில் மட்டுமல்லாது பலருக்கும் தோற்பட்டையில் வருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.
இதனை சிகிச்சை எடுத்து முழுமையாக நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
தோற்பட்டையில் பருக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் இறந்த கலங்கள், எண்ணெய்ச் சுரப்பிகள், மற்றும் அழுக்குகள் படிவதனாலும் சரும முடியின் வேர்ப்பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு பருக்கள் தோன்றுகின்றன. இந்த துவாரங்களில் பக்டீரியாக்களும் தேங்கி தொற்றுக்களையும் ஏற்படுத்தும்.
பருக்கள் திடீரென தோன்றுவதில்லை அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, மன அழுத்தம் போன்றவையே.
தோற்பட்டையில் ஏற்படும் பருக்களிற்காக் கிறீம், மருந்துகள் பயன்படுத்துவதனால் முழுமையான தீர்வைப் பெற முடிவதில்லை. ஆனால் இயற்கை முறையில் இலகுவாக தீர்வைப் பெற முடியும்.
தோற்பட்டையில் உள்ள பருக்களை நீக்குவதற்கான வழிகள் சில:
1. எலுமிச்சை மற்றும் சீனி ஸ்கிறப்.
எலுமிச்சையைப் பயன்படுத்துவதனால் பருக்களினால் ஏற்படும் விக்கத்தைக் குறைப்பதுடன், சருமத் துவாரங்கள் திறப்பதற்கும் உதவுகின்றது. மேலும் சரும நிறத்தை அதிகப்படுத்தவும் செய்கிறது.
பயன்படுத்தும் முறை:
எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சிறுசிறு துண்டுகளாக்கவும். அத்துடன் சிறிதளவு சீனி சேர்த்து தோற்பட்டையில் பருக்கள் உள்ள இடத்தில் சீனி முற்றாக கரையும் வரை தேய்க்கவும். 5 நிமிடங்களின் பின்னர் நீரினால் கழுவி, துவாயினால் துடைத்துக் கொள்ளவும்.
2. ஆப்பிள் சிடர் விநாகிரி.
ஆப்பிள் சிடர் விநாகிரியில் உள்ள லக்டிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் தோற்பட்டையில் உள்ள பருக்களைக் குணப்படுத்துவதுடன், சரும pH அளவைப் பேணுகிறது.
பயன்படுத்தும் முறை:
ஆப்பிள் சிடர் விநாகிரியை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்னர் நீரினால் கழுவவும். இதனை தினமும் மூன்று தடவைகள் வரை செய்து கொள்ளலாம்.
அல்லது ஆப்பிள் சிடர் விநாகிரியை நீருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் குடிப்பதனாலும் சிறந்த பலன் கிடைக்கும்.
3. ஓட்ஸ்
ஓட்ஸ் பருக்களிற்கான் சிறந்த தீர்வைத் தருவதுடன், வீக்கத்தையும் வலியையும் குறைத்து விடுகிறது.
பயன்படுத்தும் முறை:
ஒரு தேக்கரண்டி பவுடர் ஓட்ஸுடன் தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பவுடர் சேர்த்து கலவையை தயாரிக்கவும். அதனை பருக்கள் உள்ள இடத்தில் 5 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் தேய்த்து பின்பு நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறப்பானது.
4. மஞ்சள்
மஞ்சளை முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வந்தாலும், இதனால் இலகுவாக பக்டீரியாத் தொற்றுக்களை நீக்க முடியும்.
பயன்படுத்தும் முறை:
மஞ்சள் பவுடரை சிறிதளவு நீர் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1 மணிநேரத்தின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் இரு தடவைகளாவது செய்வது சிறப்பானது.
5. தக்காளிச் சாறு:
தக்காளியில் உள்ள விட்டமின் மற்றும் கனியுப்புக்கள் சருமத்தை மெருகூட்ட உதவும். அத்துடன் பருக்களால் ஏற்படும் வீக்கத்திலிருந்தும் தீர்வைத் தருகிறது.
பயன்படுத்தும் முறை:
ஒரு தக்காளியை மசித்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவும். ஒரு மணி நேரத்தின் பின் நீரினால் கழுவவும்.
6. கற்றாளைச் சாறு
கற்றாளை சாறு பங்கஸ் தொற்றுக்களிற்கு தீர்வைத் தருவதுடன் தோற்பட்டை சுருக்கங்களையும் நீக்கி விடுகிறது.
பயன்படுத்தும் முறை:
குளித்த பின்பு கற்றாளைச் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, அது உலர்ந்த பின்பு நீரினால் கழுவவும்.
அல்லது கற்றாளை சற்றுடன் எலுமிச்சை, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் த்டவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
7. குளிரான ஒத்தடம்.
குளிரான ஒத்தடம் கொடுப்பதனால் பருக்கள் நீங்குவதுடன் வலி மற்றும் வீக்கமும் குறைந்து விடுகிறது.
பயன்படுத்தும் முறை:
குளிரான நீரில் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் துணியால் நனைத்து தோற்பட்டையில் போட்டு 10 நிமிடங்கள் வரை உலர விடவும். இவ்வாறு சில தடவைகள் தினமும் செய்து வருவதனால் விரைவான தீர்வைப் பெற முடியும்