பொது மருத்துவம்:தலைக்கேறிய போதையிலிருந்து வெளியே வர நினைப்பவர்களுக்கு, சில பயனுள்ள வீட்டு மருந்துகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அது என்ன என்பதை இந்த புகைப்படத் பார்க்கலாம்.
ஆப்பிள் மற்றும் வாழைப்பழம்
ஒருவேளை உங்களுக்கு குடிபோதையால் தலைவலி இருந்தால் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது உடனடி நிவாரணத்தை தரும். வாழைப்பழ சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதும் சிறந்த தேர்வாக இருக்கும்.
தேன்
ஆல்கஹால் அருந்திய ஒருமணி நேர இடைவெளியில் 2-3 டீஸ்பூன் தேன் சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும். ஒருவேளை உங்களுக்கு கடுமையான தலைசுற்றல் இருந்தால் நீங்கள் அதிகமான தேனை எடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சி
இஞ்சி ஆல்கஹாலை செரிமானப்படுத்த உதவுவதுடன், வயிறை ஒருநிலைப்படுத்துகிறது. எனவே 2,3 இஞ்சித்துண்டுகளை மெல்லுவது அல்லது இஞ்சி டீ குடிப்பது என்பது உடனடி நிவாரணத்தை வழங்குகிறது.
புதினா
புதினா ஜீரணத்திற்கு உதவி வயிறு மற்றும் குடலில் குவிந்திருக்கும் வாயுவை வெளியேற்றுகிறது. எனவே மது மயக்கத்தில் இருப்பவர்கள் 3-5 புதினா இலைகளை சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சை
எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ என்பது ஹேங்கோவருக்கான நல்ல வீட்டு மருந்து. இது ஆல்கஹாலை உட்கொண்டு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. எனவே சர்க்கரை போடாத லமன் டீயை நீங்கள் தயார் செய்து கொடுக்கலாம். இது வயிற்றில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி நச்சு பண்பை நீக்குகிறது.
தக்காளி
தக்காளியில் உள்ள புளிப்புசுவை ஹேங்கோவரை போக்குவதற்கான நல்ல நிவாரணி. எனவே தக்காளி ஜூஸை தயார் செய்து அதில் சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணத்தை நீங்கள் பெறலாம்.
முட்டைகோஸ்
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவது குடியால் ஏற்பட்ட தலைவலியை நீக்குவதுடன் நரம்புகளில் இருக்கும் தொந்தரவையும் சரிசெய்கிறது. எனவே முட்டைகோஸ் சாறுடன் சிறிது தக்காளி பழச்சாறை கலந்து சாப்பிடுவது மது மயக்கத்தை கட்டுப்படுத்துடன் மெட்டாபாலிசத்தையும் துரிதப்படுத்துகிறது.