Home ஆரோக்கியம் பொது மருத்துவம் நீங்கள் பச்சைப் பூண்டை சாப்பிடால் என்ன நன்மை தெரியுமா?

நீங்கள் பச்சைப் பூண்டை சாப்பிடால் என்ன நன்மை தெரியுமா?

148

பொது மருத்துவம்:பூண்டை பச்சையாய் அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்.

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க இதனை பயன்படுத்தலாம்.

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற, பலரின் வயிற்றை தட்டையாக்க, பச்சை பூண்டு மிக மிக சிறந்தது.

சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும. பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.

பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, உடல் ஆரோக்கியம் பெறும்.