திருவள்ளூரை சேர்ந்த நர்ஸ் கொலை வழக்கில், உல்லாசத்துக்கு மறுத்ததால் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்ததாக அவரது காதலன் பரபரப்பு வாக்கு மூலம் அளிததுள்ளார்.திருவள்ளூர் அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்த குப்பன் என்பவரது மகள் 21 வயதுடைய சாமுண்டீஸ்வரி. மணவாள நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார்.
இந்நிலையில் சாமுண்டிஸ்வரி செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து தனது செல்போனை வீட்டில் வைத்து விட்டு சாமுண்டீஸ்வரி வெளியே கிளம்பி விட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவரைப் பெற்றோர் தேடி சென்றனர். அப்போது, வீட்டின் அருகே உள்ள முட்புதரில் சாமுண்டிஸ்வரி இறந்து கிடந்தார்.
அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்துப் பென்னலூர்பேட்டை காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாமுண்டீஸ்வரி செல்போனுக்கு அடிக்கடி பேசிய நம்பர் பற்றி விசாரணைநடத்தினர்.
இந்த வசாரணையில் நெய்வேலி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற இளைஞர் அடிக்கடி சாமுண்டீஸ்வரி செல் போனுக்கு பேசியது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் அவரை அழைத்து அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், சாமுண்டீஸ்வரியைக் காதலித்து வந்ததாக தெரிவித்த அவர், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்போது ராஜ்குமார் கூறியதாவது:-
“நானும் சாமுண்டிஸ்வரியும் 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். 21 ஆம் தேதி மாலை சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து வருமாறு அழைத்தபோது, இப்போது வர முடியாது என்றாள்.
நீ வரவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்றேன். இதனால் அவள் உடனே என்னை பார்க்க வந்தாள். கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சென்று பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது உல்லாசமாக இருக்க, என் ஆசைக்கு இணங்குமாறு சாமுண்டீஸ்வரியை கட்டாயப்படுத்தினேன். அவள் மறுத்ததால், விடாப்பிடியாக நான் அவளை அழைத்தேன்.
இதனால் அவள் எழுந்து ஓடினாள். அங்கு கிடந்த கல்லை எடுத்து வீசியபோது அவள் நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவள் மயங்கி விழுந்தாள்.
அவளை உயிருடன் விட்டால் வீட்டில் சொல்லி பெரிய பிரச்னை ஆக்கிவிடுவாள் என்று கருதி, அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து அவள் தலையில் போட்டு கொன்றேன்.
பின் என் அண்ணன் ஸ்டீபன்ராஜுக்குப் போன் செய்து வரவழைத்தேன். நானும் அண்ணனும் சேர்ந்து சாமுண்டீஸ்வரி உடலை புதரில் போட்டுவிட்டு ஓடிவிட்டோம்.
சாமுண்டீஸ்வரி செல்போனில் பதிவாகி இருந்த என் போன் நம்பரை வைத்து காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.“ என்று ராஜ்குமார் தெரிவித்தார்