Body Fit Exersice:இன்று பெரும்பலான வீடுகளில் கணவன் மனைவி பிரச்சினை அதிகமாக இருக்கும். இருவரிடமும் புரிதலும் பக்குவமும் இல்லையென்றால் இந்த சஞ்சரவுகள் ஏற்பட கூடும். இதனை தடுக்க பலவித கவுன்சிலிங், உளவியல் மருத்துவர்கள் போன்றவற்றை பல வழிகளை தேடி செல்வது இயல்பே. ஆனால், இதை விட சிறந்த வழிகள் உள்ளன.
அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த தம்பதிகளுக்கான ஆசான நிலைகளே. இது இன்று நேற்று வந்த முறைகள் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இந்த வகையான ஆசன நிலைகளை பயன்படுத்தி அவர்களின் தாம்பத்திய வாழ்வை இனிமை பெற செய்தனர். அவை என்னென்ன முறைகள் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
தம்பதி ஆசன நிலைகள் பொதுவாக ஆசன பயிற்சியில் பல வித நிலைகளை கொண்டிருக்கும். தனியாக செய்யும் ஆசனங்களை போன்றே தனது துணையுடன் இது போன்ற ஆசனங்களை செய்து வந்தால் இல்லற வாழ்வு இனிமை பெரும். மேலும், இது உடல் வலிமையையும், ஆரோக்கியமான சூழலையும் ஏற்படுத்தி தரும்.
விருக்சாசனம் மரம் போன்ற நிலையில் இந்த ஆசன பயிற்சியை செய்ய வேண்டும். இது இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிக்க செய்யுமாம். குறிப்பாக ஹார்மோன்களை சீரான அளவில் இந்த ஆசனம் சுரக்க வைக்கும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் நல்ல பலனை அடைய முடியும்.
ஆசன முறை #1… இந்த பயிற்சியை செய்ய, முதலில் இரு கால்களையும் சிறிது விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து வலது காலை மடக்கி, அதை மேலே உயர்த்தி அடிப்பாதத்தை இடது தொடையின் மேல் வைக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் நிலையாக நின்று கொண்டு, மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியே விடவும். ஆசன
நிலை #2… பிறகு கைகளை மேலே உயர்த்தி வணக்கம் சொல்லும் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, 10 முதல் 30 விநாடிகள் இருக்கலாம். இந்த ஆசன பயிற்சி தம்பதியர் இருவரும் செய்து வந்தால் நல்ல நெருக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
நவ்காசனம் இந்த ஆசனத்தை தம்பதியர் இருவரும் படகு போன்ற நிலையில் செய்ய வேண்டும். உடல் எடையை குறைத்து அதிக வலிமையை உடலுக்கு தரும். பெரும்பாலும் ஆண்களுக்கான பிரச்சினைகளை இந்த ஆசனம் குணப்படுத்தும். அத்துடன் வயிற்று சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இது சரி செய்யும்.
பயிற்சி முறை… முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, கால்களை மேலே தூக்கி கொள்ளவும். இந்த நிலையில் இரு கைகளாலும் இரு கால்களையும் பிடித்து படகை போன்று செய்ய வேண்டும். இதே நிலையில் இருவரும் இருக்க வேண்டும். பின், மூச்சை இறுக்கமாக பிடித்து கொள்ளாமல், இலகுவாக உடலை வைத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
புது வித ஆசன நிலை இந்த ஆசனம் மிக முக்கிய ஆசனமாகும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் பல்வேறு நலன்கள் பெறலாம். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்புகளில் அதிக வலிமையை கூட்டும். மேலும், தாம்பத்தியத்தில் ஏற்படும் நடுக்கத்தையும் இந்த ஆசன பயிற்சி குணப்படுத்தி விடும்.
ஆசன பயிற்சி… முதலில் ஆண் கீழே படுத்து கொள்ள வேண்டும். அடுத்து காலை மேலே தூக்கி கொள்ளவும். பிறகு பெண் அவரின் கையை பிடித்த படியே அவரின் கால் மீது தனது வயிற்றை வைத்து மெல்ல உடலை மேலே எழ வைக்க வேண்டும். இந்த நிலையில் மெல்ல மூச்சை இழுத்து விடவும்.
அர்த மத்ஸ்யேந்திர ஆசனம் இந்த ஆசனம் உடலில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இலகுவான செயல்பாட்டை தரும். தாம்பத்திய வாழ்வை இனிமை பெற செய்ய இந்த யோக உதவும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடல் சார்ந்த கோளாறுகள் இதன்மூலம் குணமாகும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
பயிற்சி முறை… இந்த ஆசனத்தை செய்ய முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, பின் வலது காலை இடது காலின் மேல் போட்டு விட்டு, இடது காலை வலது காலிற்கு அடியில் வைத்து கொள்ளவும். அடுத்து, இடது கையை வலது காலின் கட்டை விரலை பிடிக்கும்படி செய்யுங்கள். அத்துடன் வலது கையை முதுகுக்கு பின்புறம் வைத்து கொள்ளவும். இவ்வாறு இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.