Home ஆண்கள் ஆண்களின் மலட்டுத்தன்மையை தூங்குவதை பொறுத்து கணிக்கலாம்

ஆண்களின் மலட்டுத்தன்மையை தூங்குவதை பொறுத்து கணிக்கலாம்

255

ஆண்மை பெருக்கம்:ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Infertility)
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் பிரச்சனைகள் இருப்பதால், அவர்களால் தங்கள் பெண் இணையருடன் கூடி, கருத்தரிக்கச் செய்ய முடியாமல் போகும் நிலையை ஆண் மலட்டுத்தன்மை என்கிறோம்.

ஆண்களின் குழந்தை பெறும் திறனை நிர்ணயிக்கும் காரணிகள் (Factors determining male fertility)
ஒரு ஆணின் இனப்பெருக்கத் திறன் பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது அவற்றில் சில:

கருமுட்டையை கருவுறச் செய்யக்கூடிய ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன்: ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு, விந்தணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முக்கியக் காரணமாக உள்ளது. விந்தணுக்கள் குறைவாக இருக்கலாம், வழக்கத்திற்கு மாறான பண்புகளைக் கொண்டிருக்கலாம், வளர்ச்சியடையாமல் இருக்கலாம் அல்லது நீந்த முடியாமல் இருக்கலாம்.
விந்தணுக்களை வெளியே உந்தித்தள்ளப் போதுமான அளவுக்கு ஆண்குறி விறைக்கும் தன்மை: இந்தத் திறன் குறைவாக இருந்தால் விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்றடைய முடியாது.
தூக்கமும் ஆண்களில் மலட்டுத்தன்மையும் (Sleep and male fertility)
மற்ற காரணங்கள் மட்டுமின்றி, தூக்கம் கூட ஆண்களின் மலட்டுத்தன்மைக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது.

2013இல் டென்மார்க்கில் ஆரோக்கியமான 953 ஆண்கள் பங்கேற்ற ஓர் ஆய்வில், தூக்கத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் விந்தணுவின் தரத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தூக்கத்தில் அதிக தொந்தரவுகள் உள்ள ஆண்களுக்கு, குறைவான தொந்தரவுகள் உள்ள ஆண்களுடன் ஒப்பிடுகையில், மொத்த விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவும், அவர்களின் முதிர்ச்சியடைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை 1. 6% குறைவாகவும் இருந்தது தெரியவந்தது. தொழில்மயமான நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் மொத்த இளைஞர்களில் சுமார் 20% பேருக்கு விந்தின் தரம் குறைந்திருக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.

சமீபத்தில் 2016இல் சீனாவில் வெளியிடப்பட்ட ஆய்வின் அறிக்கையில், 656 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆய்வில் தூங்கும் நேரத்திற்கும் விந்தணுக்களின் தரத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 மணிநேரத்திற்கும் அதிகமாகத் தூங்குவதற்கும், விந்தின் அளவு 21. 5% மற்றும் மொத்த விந்தணுக்கள் எண்ணிக்கை 39. 4% குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விந்தின் அளவும் விந்தணுக்களின் மொத்த எண்ணிக்கையும் முறையே 4. 6% மற்றும் 25. 7% குறைவதற்கும் 6. 5 மணிநேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதற்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

பாஸ்டன் நகரில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 695 தம்பதியர் பங்கேற்றனர். அவர்களில் ஆண்கள் 21 மற்றும் அதிக வயதும் பெண்கள் 21-45 வயதும் கொண்டவர்கள். இந்த ஆய்வில் தூக்கத்தின் தரத்தினால் ஆண்களின் குழந்தை பெறும் திறனில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறைவாகத் தூங்குவது, அதிகமாகத் தூங்குவது மற்றும் தூக்கத்தில் தொந்தரவுகள் இருப்பது போன்றவை, ஆண்களின் கருத்தரிப்புத் திறன் (தனது பெண் இணையருடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன்) குறைவதுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.

ஆண்களின் இனப்பெருக்கத் திறனை தூக்கம் எப்படிப் பாதிக்கிறது (How sleep affects male fertility)
தூக்கம், ஆண்களின் கருத்தரிப்புத் திறனை எப்படிப் பாதிக்கிறது என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை. தூக்கம், உடல் எடை கூடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, இதனால் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

ஒழுங்காகத் தூங்காமல் போவதால், உடலில் உள்ள சிர்கேடியன் கடிகாரம் (இரவு பகல் சுழற்சியுடன் தொடர்புடைய வழக்கமான செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும் கடிகாரம் போன்ற அம்சம்) பாதிக்கப்படுவதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இறுதிக் கருத்து (Conclusion)
பெரும்பாலும் சரியாகத் தூங்காமல் இருப்பது என்பது ஆண்களின் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது, அது இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரிவிகித உணவு ஆகியவை பொதுவான உடல்நலத்திற்கு மிக முக்கியமாகும்.

தூக்கம் குறைவாக இருப்பதோ, அளவுக்கு அதிகமாகத் தூங்குவதோ விந்தின் தரத்தைப் பாதிக்கும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதுமட்டுமின்றி, தூக்கம் சம்பந்தப்பட்ட விந்து பிரச்சனைகள் குணப்படுத்தக் கூடியவையாக உள்ளன. இதை வைத்து, தூக்கத்தை சரிசெய்துகொள்வதன் மூலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மைப் பிரச்சனை வராமல் தடுப்பது மட்டுமின்றி, அதற்கு சிகிச்சையளிக்கவும் சாத்தியமுள்ளது என்று கருதலாம்.

போதுமான தூக்கமும் ஓய்வும் இனப்பெருக்கத் திறனுக்கு முக்கியமாகும். தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இனப்பெருக்கத் திறன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.