மருத்துவம்:நெதர்லான்டில் மேற்கொள்ளப்பட்ட மருந்து சோதனை, குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டுவதற்காக கொடுக்கப்பட்ட வயாகரா 11 குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள் ஏற்கனவே குழந்தைப் பேறு இறப்புக்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆயினும் இறப்புக்களுக்கான உண்மையான காரணம் இதுவரையில் புரிந்துகொள்ளப்படவில்லை. அக் குழந்தைகள் ஏற்கனவே வளர்ச்சி தடைப்பட்ட நிலையில் உயர் நெருக்கடியில் காணப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கருப்பையில் நோயுற்றிருக்கும் குழந்தைகளில் வயாகரா அனுகூலமான விளைவுகளைத் தரக் கூடுமா என ஆராயப்பட்டிருந்தது.
வயாகரா ஆனது ஆண்களில் விறைப்புச் செயலிழப்பிற்கெதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. ஆயினும் இது தெரிவு செய்யப்பட்ட நிலைமைகளில் கர்ப்பிணிப் பெண்களிலும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான ஆதாரங்களும் எழத்தான் செய்கின்றன. இது பொதுவாக பெண் முன் மூல் வலிப்பு மற்றும் கருவானது அதன் வளர்ச்சி தடைப்பட்டிருக்கும்போது.
கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியை சிசு காட்டும் போது அங்கு தொப்புள் கொடியால் சிசுவுக்குத் தேவையான போசணையையும், ஒட்சிசனையும் வழங்கமுடியாமல் போகின்றது.
இந் நலைமைகளில் வயாகராவானது குருதிக் குழாய்களை விரிவடையச்செய்து தொப்புள் கொடி மற்றும் கருப்பைக்குரிய இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கின்றது.
அண்மையில் ஆஸியில் இது தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கு சாதாரண சிசு வளர்ச்சியைக் காட்டும் முழு மாத கர்ப்பிணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கென வயகராவின் மிகக் குறைந்த அளவு மிகக் குறுகிய காலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது, விளைவில் இம் மாதிரியான நிலைமைகளில் அது அனுகூலமான விளைவுகளைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.
SHARE.