அந்தரங்க செய்திகள்:பாலியல் என்பது அவமான ஒன்றாக பார்க்கப்பட்டது இல்லை. காமசூத்திரம் முதல் கஜுராகோ சிற்பம் வரை பாலியல் புனிதமானதாகத்தான் இருந்தது. நாகரீக வளர்ச்சி பலவற்றை தவறான விஷயமாக காட்டிவிட்டது. எப்படி, சிறுநீர் என்று சொல்வது கெட்ட வார்த்தையாகிவிட்டதோ அதுபோல இனப்பெருக்கத்துக்கு காரணமான பாலியல் என்பதும் கெட்ட விஷயமாக மாறிவிட்டது. செக்ஸ் என்பது மிக மிகக் கெட்ட வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. நம்முடைய சந்ததியை பெற்றெடுக்கும் விஷயம், பொது வெளியில் அசிங்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதைப் பற்றி பேசுவதே பாவம் என்று உள்ளது.விளைவு பல தவறான வழிக்கு இளைஞர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். இதை நம்முடைய சந்ததியை பெருக்கும் ஒரு விஷயமாக, இதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்கள் செயல்படுவதுபோன்றதுதான் பாலியல் வேட்கையும் என்பதையும் உணர்ந்தால் பிரச்னையே இருக்காது.
ஆண் பெண் உடலுறவு பற்றி பேசுவோம், விவாதிப்போம். ஆனால், அது எத்தனை நிலைகளைக் கொண்டது என்பது பற்றியோ அதன் உச்சக்கட்டமான பபரவசநிலை என்பதுபற்றியோ அப்போது கிடைக்கும் இன்பத்தின் உச்சநிலையை அடைய என்ன வழிகள் என்பதுபற்றியோ நம்மில் பலருக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பலருக்கும் அந்த உச்சநிலையை முழுமையாக அடையவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதை எல்லாமா வெளியில் பேசுவது என்று மனதுக்குள் பூட்டி வைத்துவிடுகிறோம்.
உடலுறவில் ஸ்பரிசம் என்னும் தொடு உணர்ச்சியில் தொடங்கி உராய்வு, உட்புகுத்துதல், அசைவுகள், உச்சகட்டம் என்ற நிலைகள் இருக்கின்றன. அதன்படி எல்லோரும் செயல்படுவதில்லை. விந்து வெளியேற்றுவதுடன் அத்தனையும் முடிந்துவிட்டதாகக் கிளம்பிவிடுவோம். ஆனால், அதுவல்ல உடலுறவு. அது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி விரிவாகப் பேசலாம். ஆனால், இங்கே நாம் புணர்ச்சிப் பரவசநிலை என்றால் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.
இதை தவறான கண்ணோட்டம் இன்றி, ஒரு மருத்துவமாக பாருங்கள்…
பாலியல் பரவசநிலை… இதை ஆங்கிலத்தில் ஆர்கஸம் (Orgasm) என்பார்கள். பாலின்ப உச்சி என்றும் சொல்வார்கள். செக்சுவல் க்ளைமாக்ஸ் (sexual climax) என்றும் இதற்கு வேறொரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது நீண்ட நெடிய பாலுணர்வுத் தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் உடல், உளவியல் மற்றும் மெய்ப்பாடு (எமோஷன் – emotion) போன்ற நிலைகளில் ஓர் நிறைவைத்தரும் தூண்டுதலைக் குறிக்கக்கூடியது. இந்த நிகழ்வின்போது விந்து தள்ளுதல், மேனி (உடல்) சிவத்தல், தானாக இயங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படும்.
பாலியல்பரவசநிலை என்பது தும்மலைப் போன்றது என்றும், அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும், விவரிப்பது கஷ்டம் என்றும் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். பொதுவாக செக்ஸ் பார்ட்னருடன் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது, கிடைக்கும் கிளர்ச்சியும் அதைத்தொடர்ந்த விந்து வெளியேற்றமும் இன்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதைத்தொடார்ந்து ஓர் ஆயாசம் ஏற்படும். அதுதான் `பாலியல்பரவசநிலை’ எனப்படும் `ஆர்கஸம்’ என்கிறார்கள். செக்ஸ் உறவில் ஏற்படும் எத்தனைபேருக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது என்பது இன்றைக்கு கேள்விக்குறியே?
பரவசம் என்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி, மெய்மறந்த நிலை என்ற ஒரு பொருள் உண்டு. இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், களிப்பு மிகுதியால் சுற்றி நடப்பதை உணரமுடியாத நிலை என்ற ஒரு பொருளும் சொல்லப்படுகிறது. இத்தகைய ஒரு நிலை ஆண் பெண் இருவருக்கும் ஏற்பட வேண்டும். மேலும் அப்போது பெருமகிழ் உணர்வு மற்றும் கீழ் இடுப்புத் தசைகளுக்கு அதிக அளவிலான ரத்த ஓட்டம், ஒழுங்கான இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் (பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர்) சுரப்பதால் ஏற்படும் ஓர் அயர்ச்சி உணர்வு போன்ற சில நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இது சிலநேரங்களில் இருவருக்கும் மாறுபட்ட நிலைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
ஆண்களுக்கு பரவசநிலை ஏற்படும்போது மிகுந்த அழுத்தத்துடன் விந்து வெளியேறும். ஒருமுறை பரவசநிலை ஏற்பட்டால் உடனடியாக மீண்டும் பரவசநிலை ஏற்படாது. அடுத்த பரவசநிலை ஏற்பட ஒவ்வொருவரின் வயது மற்றும் அவர்களது உடல்வாகைப் பொறுத்து ஒரு நிமிடத்தில் இருந்து அரைநாள் கூட ஆகலாம். பெண்களுக்கு பரவசநிலை ஏற்படுவதற்கு முன் சில சுரப்பிகள் சுரக்கப்படுவதால் பல்வேறு மாற்றங்கள் இனப்பெருக்க மண்டலத்தில் நிகழ்கின்றது. இவற்றை எல்லாம் விரிவாகப் பேசினால் நம்முடைய கலாச்சாரம் மிகத் தவறாக நம்மை கருதும். கலாச்சாரம் வேறு மருத்துவம் வேறு. இதை மருத்துவமாக மட்டும் பார்த்தால் அதில் ஆபாசம், சங்கடம் தெரியாது.
இன்றைக்கு முழுமையான பரவசநிலையை அடையமுடியாமல் தவிக்கும் பலரைக் காண முடிகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அதுபற்றி மீண்டும் பேசுவோம்.