பாலியல் தகவல்:டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு செக்ஸ் ஹார்மோன். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தவரின் உடலிலும் இருக்கும். குறிப்பாக இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் அதிகளவிலும், பெண்களின் உடலில் குறைவான அளவிலும் இருக்கும். இந்த ஆண் செக்ஸ் ஹார்மோன் ஒரு ஆணின் உடலில் குறைவான அளவில் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.
ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆண்களின் உடலில் பல முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது. அதில் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சி, ஆண்களின் வலிமையான குரல், முடியின் வளர்ச்சி, இதர ஆண் மகனுக்கான தோற்றங்கள், விந்து உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியானது வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும் மற்றும் பல வயது முதிர்ந்த ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் நன்கு தெரியும்.
உங்களுக்கு ஒரு ஆணின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
விறைப்புத்தன்மை பிரச்சனை
டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஆணின் உடலில் குறைவாக இருந்தால், அந்த ஆணால் உறவின் போது விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைப்பது அல்லது விறைப்பு ஏற்படுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆணுறுப்பில் உள்ள திசுக்களைத் தூண்டிவிட்டு நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலினுள் பல வினை புரியும் போது, அதன் விளைவாக ஏற்படுவது தான் விறைப்புத்தன்மை.
விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான இதர காரணிகளாவன: புகைப்பிடித்தல், தைராய்டு பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், மது அருந்துதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்.
தலைமுடி உதிர்தல்
பல ஆண்கள் வயது அதிகரிக்கும் போது சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இப்படி வயது அதிகரிக்கும் போது தலைமுடி உதிர்வதற்கு காரணம், உடலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவாக இருப்பது தான்.
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் டெஸ்டோஸ்டிரோன் எலும்பு திசுக்களை உற்பத்தி செய்ய உதவுவதோடு, எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும் உதவியாக உள்ளது. ஆனால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்
சிறிய அளவு விரை விதை ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், அவர்களது விரை விதையின் அளவு சுருங்கி சிறியதாக காணப்படும். அதுமட்டுமின்றி, விரை விதை வழக்கத்திற்கு மாறாக மிகவும் மென்மையாக இருக்கும்.
தூங்குவதில் சிரமம் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருக்கும் ஆண்கள், தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். குறைவான டெஸ்டோஸ்டிரோன் கொண்ட பல ஆண்களுக்கு தூக்கத்தின் போது அதிக சப்தத்துடன் குறட்டை விடுவார்கள். இன்னும் தீவிரமான நிலையில் தூக்கத்தின் போது சரியாக மூச்சு விட முடியாமல் திணரக்கூடும்.
பாலுணர்ச்சி குறைபாடு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அந்த ஆணுக்கு பாலுறவில் உள்ள நாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இந்த ஆண்களால் உறவில் ஈடுபட வேண்டிய எண்ணமே தோன்றாது. இதனால் இவர்களது பாலியல் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகும்.
தசைகளின் அடர்த்தி குறைவு டெஸ்டோஸ்டிரோன் தசைகளின் அடர்த்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்போது ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளதோ, அந்த ஆணின் தசைகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே இதை வைத்தும் ஒரு ஆணின் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.
வெப்ப உணர்வு பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கும் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென்களின் அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினாலும், டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகவும் குறைவாக இருப்பதனாலும், மிகுதியான வெப்ப உணர்வைப் பெறுவார்கள். இதை வைத்தும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆற்றல் குறைபாடு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அதனால் உடலின் ஆற்றல் குறைந்து, மிகுதியான களைப்பை உணர வேண்டியிருக்கும். அதுவும் ஒருவர் போதுமான ஓய்வை எடுத்தும், எவ்வித கடுமையான உடலுழைப்பில் ஈடுபடாமலும், மிகுந்த களைப்பை உணர்ந்தால், அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
அதிகளவு உடல் கொழுப்பு ஒருவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அவர்களது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில் ஆண்களுக்கு பெண்களைப் போன்று மார்பகங்கள் வருவதற்கு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடும் ஓர் முக்கிய காரணமாக இருக்கலாம்.