Home பெண்கள் தாய்மை நலம் பெண்களின் தாய்மையை தாக்கும் கருப்பை கோளாறு!

பெண்களின் தாய்மையை தாக்கும் கருப்பை கோளாறு!

56

இல்லற வாழ்வில் நுழையும் தருவாயிலேயே ஒரு சில பெண்களுக்கு மாற்றங்கள் தெரியும். கருவை சுமப்பதை உறுதி செய்ய டாக்டரைச் சந்திக்கும் பெண்… அதை காப்பாற்றி பெற்றெடுக்க – பிரசவிக்க என பலமுறை மகப்பேறு மருத்துவரை சந்திப்பாள். இதெல்லாம் சுகமான அனுபவங்கள்.

இனி குழந்தை வேண்டாம் என்ற முடிவோடு மூன்று குழந்தைகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாட்டிற்குதான் ஆபரேஷன்.

மூன்று குழந்தைகளும் நார்மல் டெலிவரியில் பிறந்த பின்னர் வயிற்றைக் கிழித்து செய்து கொண்ட முதல் ஆபரேஷன் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்தான். அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் உருவாகவில்லை. அதன் பின் 22 வருடங்கள் உருண்டோடிய பின் பெண்களுக்கே உரிய மெனோபாஸ் பிரச்சினை என்னைப் பற்றிக் கொண்டது.

கர்ப்பபையை நீக்கும் ஆபரேஷன்தான் நான் சந்தித்த சிக்கலுக்கு தீர்வாக அமைந்தது. இதற்காக இரண்டாவது முறையாக வயிற்றைக் கிழித்தனர். அடுத்த ஆறு வருடத்தில் வயிற்றில் வலி உருவாக ஆரம்பித்தது.

விட்டு விட்டு வலி தொடர்ந்த போது டாக்டர்கள் வயிற்றில் புழு இருக்கலாமென நினைத்து பல பரிசோதனைகளை செய்தனர். ஆனால் வலி தொடர்ந்தது. கடைசியில் குடல்வால் எனப்படும். அப்பெண்டிக்ஸை நீக்க நேர்ந்தது.

இந்த அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷனுக்காக மூன்றாம் முறை வயிற்றைக் கிழித்தனர். அப்பெண்டிக்ஸை நீக்கிய பின்னும் சமீபகாலமாக ஒரு சில மாதங்களாக சாய்ந்து உட்கார்ந்தாலே அடி வயிற்றில் வலி தொடர ஒரு டாக்டரை சந்தித்த போது இதற்கு முன் வயிற்றைக் கிழித்து செய்த ஆபரேஷனில் ஒட்டுதல் இன்சிஷினல் ஹெர்னியா இரண்டு உருவாகி இருப்பதால் இவற்றை சரி செய்ய இன்னுமொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டும் என்று சொன்ன போது என் மனதை பயம் கவ்வியது.

இன்னும் எத்தனை முறைதான் என் வயிற்றைக் கிழிப்பார்கள்? வயிற்றில் குழந்தையை சுமக்கலாம். வடுவையும் வலியையும் சுமப்பதே என் தலைவிதியாகி விடுமோ என உள்மனதில் வேதனை உண்டாகியது.

அப்பொழுது தான் சென்னை டாக்டர் ராஜ்குமாரை அணுகி அடிவயிற்றில் வலியைப் பற்றி சொன்னேன். படபடவென்று அவர் பேசியவிதம், விவரித்த விதம் என் மனதுக்கு நிம்மதியை தந்தது.

வயிற்று வலிக்காக நான் லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் செய்தேன். ஆபரேஷனான ஒரு வாரத்திலேயே நான் நார்மலாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டேன். வயிற்றைக் கிழிப்பதோ தைப்பதோ இல்லாததால் இனி வலி உருவாக வாய்ப்பில்லை. ஆபரேஷனாகி எட்டு வாரங்களில் முழுவதுமாக வலி சரியாகி விடுமென்று டாக்டர் சொன்னார். ஏழாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறேன்.

இது பற்றி டாக்டர் ராஜ்குமார் கூறும்போது “லலிதாவுக்கு இந்த 3 பிரச்சினைகள் இருந்தது.

1. அடிஷன்ஸ் – அதாவது ஏற்கெனவே செய்த குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன், அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷன் ஆகியவற்றால் போட்ட தையலில் சதை ஒட்டிக்கொண்டிருத்தல்.

2. ஆபரேஷன் பண்ணிய இடத்தில் பலஹீனப்பட்டுப் போனதால் உருவாகி இருக்கக்கூடிய இன்சிஷினல் ஹெர்னியா.

3. அப்பெண்டிசிடிஸ் ஸ்கார் – பெரிய ஸ்கார் இருக்கும் போது ஷீட்டர் மூடும் போது உள்ளடங்கிய ஒன்றிரண்டு நரம்புகள் மாட்டிக்கலாம். இதை நெர்வ் என்டிராப் மொல்ட் என்று சொல்வர். அதனாலும் வலி இருக்கும்.

இதனால் வயிற்றில் வலி ஒட்டுதலினாலா – ஹெர்னியா வாலா – நரம்பு மாட்டிக் கொண்டதாலா என்று நம்மால் சொல்ல முடியாது.

ஒன்றை சரி செய்து அனுப்பிவிட்டு வலி தீரவில்லை என்றால் தவணை முறையிலே ஆபரேஷன் பண்ண வேண்டிவரும். ஆனால் நாங்க அப்படி செய்யாமல் வலிக்கு வழிவகுக்கும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம்.

இவங்களுக்கு இன்சிஷினல் ஹெர்னியாவுக்கு வலையை பொருத்தி ஒட்டுதலை நீக்கி, வடுவிருக்கும். இடத்திலே நரம்பு மாட்டிக் கொண்டிருப்பதை விடுவிக்க “என்டிராப் மென்ட் நியூரோபதியை நியூரோலிசிஸ் செய்தோம். அதில் நரம்பை விடுவிப்பதை நெர்வ் என்று சொல்வர். அதைத்தான் செய்தோம்.

இதனால் நோயாளிக்கு நல்ல பலனிருக்கும். நரம்பு மாட்டிக் கொண்ட இடத்தில் வலியில்லாமல் இருக்க மரத்துப்போகும் லோகல் அனஸ்தீசியா ஊசி போடலாம். ஊசி போட்ட உடனே வலி போயிடுச்சுன்னு சொல்வாங்க.

சில சமயம் சரியாக நரம்பு மாட்டிக்கொண்டிருக்குமிடத்தில் ஊசி போடாததால் வலி இல்லை என நினைத்து ஒட்டுதலுக்கு மாத்திரம் ஆபரேஷன் பண்ணிவிட்டு விட்டால் அப்பவும் நரம்பு மாட்டின இடத்தில் வலி இருந்து கொண்டிருக்கும். பிரச்சினை தீராது.

வயிறு என்பது ஒரு பண்டோராபெட்டி என்பர். அதை திறந்தால்தான் பிரச்சினைகள் வெளியில் தெரியும். இந்த நோயாளி வலி பொறுக்க முடியாமல் ஆபரேஷன் பண்ணச் சொல்லி கேட்டுகிட்டே இருந்தாங்க.

முதலில் மருந்து கொடுத்து சரியாகிறதா என பார்ப்பது நம் கடமை. அதனால் கொஞ்ச நாள் அப்படி முயற்சி செய்தோம். ஆனால் வலி தீராத பட்சத்தில் ஆபரேஷன் செய்யும் போது மூன்று பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம்.

வலி என்பது வந்து விட்டால் அடியோடு அதைத் தீர்க்க அடிவேர் வரை உள்ள காரணங்கள் கண்டு பிடித்து சரி செய்தால்தான் நோயாளிக்கு சிகிச்சையின் பலன் கிடைக்கும் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.