Home பெண்கள் பெண்குறி பெண்களின் பெண்ணுறுப்பில் வரும் நோய்தொற்று காரணம்

பெண்களின் பெண்ணுறுப்பில் வரும் நோய்தொற்று காரணம்

118

பெண்கள் பாலியல்:ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது.

அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம்.

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே.