சூடான செய்திகள்:சாமுத்ரிக்கா லட்சனம், பவிஷ்ய லட்சனம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் வரையறை என்ன வென்று தெரியுமா?
முன்னோர்கள் அந்த காலத்தில் வீட்டிற்கு மருமகளை கொண்டுவருவதற்கு முன்பு சில மாதங்கள் செலவிட்டு முடிந்த வரை சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பெண்களையும் அலசி ஆராய்ந்தார்கள். இது ஏன் என்று தெரியுமா? இதன் காரணம் ஆழகான பெண்ணை தேடிவது இல்லை.
இதோ இங்கிருக்கும் இந்த 7 அம்சங்களை மனதில் வைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு மாகா லட்சுமி வடிவான மருமகளை கூட்டிவரவேவாகும்.
7 அம்சங்கள் என்னென்ன,
-பிரகாசமான கண்களும், வில் வடிவ புருவங்களும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இவ்வாறு அமைந்தப் பெண்கள் வீட்டில் அன்பையும் பண்பையும் கட்டி பராமரிப்பார்கள் என ஒரு கூற்று இருக்கிறது.
-மென்மையான சிவந்தப் பாதம் மற்றும் கைவிரல்கள் லட்சுமி தேவியின் அருளை பெற்றவளுக்கு அமையப்பெற்றது என கருதப்பட்டது.
-பற்கள் வெண்மையாக, சீரான வடிவில் இருப்பவர்கள் குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு செல்வார்கள் என கருதப்பட்டது.
-நெற்றியில் 3 கோடுகள் விழும் பெண்களை பணிவும், பண்பும் நிறைந்தப்பெண்கள் என கருதினர்.
-கூறிய மூக்கும், நெற்றி பாதி நிலாவைப்போலும் இருந்தால், அவர் அறிவாற்றல் அதிகம் இருப்பவர் என கருதப்பட்டது.
-சருமம் இயற்கையாகவே பளிச்சென்று மென்மையாக இருக்கும் பெண்கள் லட்சுமி கடாச்சம் பெற்றவர். அவர் இருக்கும் வீட்டில் செல்வம் செழிக்கும் என கருதப்பட்டது.
-மென்மையான குரல் கொண்டவர்களை சரஸ்வதி தேவியின் மறு உருவம் என கருதப்பட்டது.
இவ்வேழு அம்சங்களை பெற்ற ஒருவரை திருமணம் செய்தால் இல்லறம் செழிக்கும் என கூறப்படுகிறது. இப்போது புரிகிறதா? ஏன் பெண் பார்க்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று.