Home ஆண்கள் ஆண்களின் விந்தின் கரு வளத்தை அதிகரிக்க இந்த தகவல்

ஆண்களின் விந்தின் கரு வளத்தை அதிகரிக்க இந்த தகவல்

217

ஆண்மை பெருக்கு:ஆண்களின் ஆண்மைக்கு அதாவது அவர்களின் கரு வளத்திற்கு அடித்தளமாக இருப்பது, ஆண்களின் உடலில் காணப்படும் விந்துக்களின் ஆரோக்கியமும், விந்துக்களின் எண்ணிக்கையும் தான். இந்த இரண்டு சரியான அளவில் இருந்தால், அந்த ஆணுக்கு கருவளம், கருத்தரிக்க உதவுவதில் எந்த பிரச்சனையும் நேராது; விந்துக்களின் ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலான ஆண்களின் பிரச்சனையாக உள்ளது; இது தீர்க்க கூடிய பிரச்சனையே! ஆனால், விந்தணுக்களை உற்பத்தி செய்யவே முடியாத நிலை நூறில் ஒரு ஆண் மகனுக்கு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிப்பில் ஆண்களின் ஆண்மையை அதாவது ஆண்களின் கரு வளத்தை அதிகரிக்க உதவும் மருந்துகள் என்னென்ன, அவற்றை எப்படி பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து படித்து அறியலாம்.

எப்பொழுது மருந்தை நாடலாம்?
ஆண்கள் திருமணமான பின், எவ்வளவு தான் உடலுறவு கொண்டாலும், மனைவி குறைவான இன்பத்தை உணர்ந்தால்,பல வருடங்களாக குழந்தை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையை பெண்ணை மட்டும் செய்ய விடாமல், ஆண்களும் சேர்ந்து, தம்பதியராய் பரிசோதனையை மேற்கொண்டு யார் உடலில் என்ன குறைபாடு என்று கண்டறிய வேண்டும்.

ஒரேயொரு குறைபாடு!
குறைபாடு ஆண்களின் உடலில் இருப்பதாய் கண்டறியப்பட்டால், ஆண்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; பெண்களுக்கு குறைபாடெனில், அதற்கு கர்ப்பப்பை, மாதவிடாய், அண்டம், கருமுட்டை என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு ஒரேயொரு முக்கிய காரணம் தான், அது விந்துக்கள். இந்த விந்துகளின் ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மருந்துகள் குறித்து அடுத்தடுத்த பத்திகளில் பார்க்கலாம்.

Clomiphene Clomiphene எனும் மருந்து FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டி, டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை அதிகப்படியாக உற்பத்தி செய்ய உதவுகிறது. கருத்தரிப்பு நிகழ்வில் முக்கிய பங்காற்றுவது டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் தான். அந்த ஹார்மோனின் அளவை அதிகரிப்பது ஆண்மையை அதிகரிக்க மிகவும் உதவும்.

Gonadotrophins Gonadotrophins மற்றும் LH ஊக்கி இந்த இரண்டு மருந்துகளும் ஆண்களின் உடலில் மேற்கூறிய டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் அதிகமானால், விந்துக்கள் நலமாக இருக்கும். இந்த் ஹார்மோன் முக்கியமாக விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

Letrozole Letrozole எனும் மருந்து மாத்திரைகள் வடிவில் கிடைக்கிறது; இது ஆண்களில் குண்டாதல் மற்றும் ஹைபோகோடிசும் போன்ற நோய்களின் காரணமாக குறைந்த டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவை அதிகரித்து, முன்பு இருந்த டெஸ்டோஸ்டிரான் அளவிற்கு மீட்டு கொடுக்கிறது. எந்த ஒரு நோயால், ஆண்மை பாதிக்கப்பட்டாலும், இழந்த ஆண்மையை மீட்டெடுக்க உதவும் இந்த மாத்திரைகள் மிகவும் உபயோகமானது.

Imipramine Imipramine எனும் ஹார்மோன் மிகக்குறைந்த விந்துக்கள் கொண்ட, விந்துக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ள ஆண்களில் விந்தணுக்களை அதிகரித்து, அதிகரித்த விந்துக்களை ஆரோக்கியமாகவும் வைத்து ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இந்த மருந்தின் முக்கிய பணி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான்.

Bromocriptine Bromocriptine எனும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கப்படும் ஹைபேர்ப்ரொலக்ட்டினீமியா எனும் ஹார்மோன் சுரப்பை கட்டுக்குள் வைத்து விந்தணுக்களின் உற்பத்தி, ஆரோக்கியம், எண்ணிக்கை இவற்றை மேம்படுத்த உதவுகிறது. பிட்யூட்டரி மற்றும் இது போன்ற விந்தணுக்களின் செயல்பட குறைக்கக்கூடிய சுரப்பிகளை கட்டுப்படுத்தி, அசாதாரண விந்துகளின் எண்ணிக்கையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதே இந்த மருந்தின் முக்கிய பணி.

பூஞ்சைக்கான ஆன்டிபயாடிக்குகள்! பிறப்புறுப்பில் அல்லது உடலின் உட்பாகங்களில் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளின் தாக்குதலால், விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டால், இந்த மருந்தை, பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளை கொல்லும் ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்த வேண்டும்.

வெற்றி சதவிகிதம்! ஆண்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரியாக கண்டறிந்து, அதற்கேற்ப இந்த மருந்துகளை முறையாக உட்கொண்டு, உட்செலுத்தி கொண்டு வந்தால், கண்டிப்பாக கருவளம் அதிகரிக்கும்; இழந்த மற்றும் குறைந்த ஆண்மையை எளிதாக திரும்ப பெறலாம். மேலும் மேலே கூறப்பட்டுள்ள மருந்துகள் 90% வெற்றி வாய்ப்பை கண்டிப்பாக, பரிபூரணமாக வழங்கக் கூடியவை.

ஏன் 90% சதவிகிதம் என்றால், ஒவ்வொருவரின் உடல் நிலையும் வேறுபட்ட அமைப்பை, செயல்பாட்டினை கொண்டது; இது பெரும்பாலான ஆண்களில் நடத்தப்பட்ட ஆய்வின் சராசரி முடிவே. உங்கள் உடல் நிலை சரியானதாக இருந்தால், 100% வெற்றி கூட உங்களுக்கு கிடைக்கலாம்..!