இரகசியகேள்வி-பதில்:டாக்டரம்மா! எனக்கு வயது 22. கல்லூரியில் படித்து வருகிறேன். இது வரை எனது முகத்தில் முடி வளர வில்லை. பெண்களுக்கு இருப்பது போல, முகம் மழு மழு என்று இருக்கிறது. ஆனால், ஆண்மைத்தன்மை குறைய வில்லை. முகத்தில் முடி வளர நான் என்ன செய்ய வேண்டும்?
* இது குடும்ப மரபாக இருக்கலாம். இதனால் பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படாது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். இல்லையேல் மருத்துவரை நாடுங்கள்.!!!.
* டாக்டரம்மா ! எனது கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், என்னை , மற்ற ஆண்கள் யாருடனும் பேச கூட என் கணவர் அனுமதிப்பது இல்லை. எங்கள் சொந்தத்தில் இருந்து யாரேனும் ஆண்கள் வந்தால் கூட. என்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார். நான் எப்படி அவருடன் குடும்பம் நடத்துவது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் ஆலோசனை கூறவேண்டும்.
* இப்படிப்பட்ட நிலையை, “ MORBID JEALOUSY ” என்று கூறுவார்கள். குடும்பம் நடத்துவதற்கு இந்த நிலைமை பாதிப்பு ஏற்படாதபடி நீங்கள் உங்கள் நடை, உடை, பாவனையில்( BODY LANGUAGE )”-ல் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பிற ஆண்கள் அல்லது உங்கள் உறவுக்கார ஆண்கள் வரும் போது, விரைவாக பேசி, OFFICECIAL
– ஆக பேசுங்கள்.!!!.
* டாக்டரம்மா! எனக்கு 45 வயதாகி விட்டது. எனது கணவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கர்ப்ப்பையில் கோளாறு இருப்பதால், கர்ப்பம் தரிக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் என் கணவர் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாதா?
* நீங்கள் உங்கள் கணவர் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவத்தில், குழந்தை பேறு பிரிவில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. மிகவும் முன்னேறி விட்ட இந்த துறையின் மூலம் உங்கள் விருப்பப் படியே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.!!!.
* இப்போதுள்ள காலத்தில் சிறுவன் கூட , பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறான். 15 வயது சிறுமி, தவறுதலாக கருத்தரித்து விடுகிறாள். முற்காலத்தில் இது போன்ற காரியங்கள் நடந்தது இல்லை. உங்கள் கருத்து என்ன?
* பாலியல் குற்றங்கள் என்பது, எல்லா காலத்திற்கும் பொதுவானதுதான். முன்பெல்லாம், சிறு வயதிலேயே பாலியல் உணர்வுகள் உடலில் உருவாகும் போதே, திருமணம் செய்து வைத்து விடுவார்கள். எனவே, பாலியல் உணர்வு வெளிப்பாடுகள், குற்றங்களாக மாறுவதற்கான வய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. இப்போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் திருமணமே தள்ளிப்போகிறது. எனவே சமூக ரீதியாக சில இடங்களில் குற்றங்கள் நடந்து விடுகின்றன. எனவே, இக்கால இளைஞிகளும், இளைஞர்களும்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.!!!.
எனக்கு 18 வயதான போதே, எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். எனக்கு 23 வயதுக்குள் மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இப்போது எனது கணவர் இறந்து விட்டார். நான் மறு மணம் செய்யலாமா?
* உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு, கல்வி போன்றவற்றை யோசித்து மறுமணம் செய்யலாம். ஆனால், உங்கள் 2-வது கணவர் மூலமாகவும் குழந்தைகள் பிறந்தால், முந்திய 3 குழந்தைகளையும் பாதுகாப்பதிலும், படிக்க வைப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம். இது பற்றியெல்லாம் உங்கள் 2-வது கணவரிடம் பேசி ,யோசித்து முடிவு செய்யுங்கள்…!!!.
* எனது மனைவி, அவளது பெற்றோருக்கு ஒரே மகள். எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. எங்கள் குடும்பத்தை விட, எனது மனைவி குடும்பம் வசதியானவர்கள். இதனால் என் பேச்சை, என் மனைவி கேட்பது இல்லை. அவளை எப்படி திருத்துவது என்பதும் தெரிய வில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.
* கணவன்- மனைவி என்ற நிலைக்கு வந்து விட்டால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வந்து விட வேண்டும். யார் பணக்காரர் என்ற கேள்வி எல்லாம் எழக்கூடாது. உங்கள் மனைவியிடம் பக்குவமாக எடுத்து பேசி, அவருக்கு புரிய வையுங்கள். இருமனமும் ஒன்று பட்டால்தான் இல்லறம் இனிக்கும்..!!!.
* உலகம் முழுவதும் பரவியுள்ள “புளு வேல்” இணைய தள விளையாட்டில் ஏராளமான மாணவ-மாணவிகள் உயிர் இழந்து விடுகிறார்களே!! மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
* காந்தியடிகளின் 3 அறிவுரைகளை மறந்து விடாதீர்கள். தீயவற்றை கேட்க வேண்டாம். தீயவற்றை பார்க்க வேண்டாம். தீயவற்றை பேச வேண்டும். இதன்படி மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.!!!.