தாய் கட்டில் உறவு:கல்யாணமாகி முதல் குழந்தையை பெற்று எடுத்த எல்லா தம்பதியரின் மனதிலும் நிலவும் ஒரு கேள்வி குழந்தை பிறப்புக்கு பின் எப்பொழுது உடலுறவு கொள்ளலாம் என்பது தான்; அதிலும் குறிப்பாக ஆண்களின் மனதில், அனைத்து கணவர்களின் மனதிலும் இந்தக் கேள்வி கட்டாயமாக இடம்பெற்று இருக்கும். ஆனால் இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது என்று தெரியாமல், மனைவியிடமும் வெளிப்படையாக கேட்க முடியாமல் தவிப்பில் ஆழ்ந்து இருப்பர்; ஏனெனில் பச்சை உடம்புக்காரியை குழந்தை பிறந்ததும், உடனடியாக படுக்கைக்கு கூப்பிட்டால் நன்றாகவா இருக்கும்?
பிரசவத்தால் அவள் அனுபவித்த வலி தீர வேண்டாமா? உடல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாமா? எனவே மேலும் சில காலம் பொறுத்து தான் ஆக வேண்டும். ஆனால், ஆண்களையும் இந்த விஷயத்தில் குறை கூற இயலாது; பெண்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் கர்ப்ப காலமான 9 மாதங்கள் உங்களை தொடாமல் தள்ளி இருந்து, பிரசவத்திற்கு பின்னும் தள்ளி இருக்க வேண்டுமென்றால் அது சற்று கடினம் தானே! ஆகையால், கணவன்மார்களே உங்களின் முதல் குழந்தை பிறந்த பின் எப்பொழுது உடலுறவு கொள்ளலாம் என்ற தகவல் குறித்து இந்த பதிப்பில் படித்தறியுங்கள்!
கால தாமதம்! பிரசவம் முடிந்து, குழந்தையை பெற்று எடுத்த பின் சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டியது எல்லோராலும் வலியுறுத்தப்படுகிறது. ஏன் அவ்வாறு வலியுறுத்தப்படுகிறது? குழந்தை பிறந்த பின் சற்று கால தாமதம் அளித்து தான், உடலுறவில் ஈடுபட வேண்டும்; அது ஏன் காலம் தாழ்த்த வேண்டும் என்ற கேள்விக்கு பின்வரும் பத்திகளில் உங்களுக்கு விடை கிடைக்கும். உங்கள் கேள்விக்கான பதிலை இங்கு படித்தறிய தொடங்குங்கள்!
மாதவிடாய் பெண்ணின் உடலில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மாதவிடாய் பிரசவத்திற்கு பின் வெளிப்படும்; பொதுவாக 3-5 நாட்கள் நீடிக்கும் மாதவிடாய், இந்த சமயத்தில் மட்டும் ஒரு மாத காலம் நீடிக்கும்; தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படும். குழந்தை பிறந்த நொடி முதல் தாய்ப்பால் உற்பத்தியும் பெண்ணின் உடலில் ஏற்பட ஆரம்பித்துவிடும். இந்த இரண்டுமே நீச்சு வாசம் அளிக்கக் கூடியவை; ஒன்று குழந்தைக்கு மிக முக்கியம்; மற்றோன்று பெண்ணின் உடல் இயக்கத்திற்கு மிக மிக முக்கியம். இந்த விஷயம் தெரிந்தும் நீங்கள் உடலுறவு கொள்ள முயன்றால், பெண்ணின் மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு இரண்டில் இருந்தும் வரும் நீச்சு வாடை உங்களை ஒரு கை பார்த்துவிடும்; உடலுறவையே வெறுக்கும் மனநிலையை உங்களுக்கு கொடுத்தாலும் கொடுத்து விடும். ஆகையால் இந்த இரண்டையும் உடலுறவு என்ற பெயரில் தொந்தரவு செய்தல், இடையூறு செய்தல் என்பது கூடவே கூடாது; இதை மீறி நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால், அது குழந்தைக்கும் உங்கள் மனைவிக்கும் ஆபத்தாக முடியலாம்
தையல் மற்றும் காயங்கள் பிரசவத்தின் பொழுது பெண்ணின் உடலில், முக்கியமாக அவளின் பிறப்புறுப்பில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருக்கும்; பல தையல்கள் போடப்பட்டிருக்கும். சதையை பிளந்து குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறாள் பெண்; அந்தக் காயங்கள் ஆற சரியான கால அவகாசம் அளிக்க வேண்டும். கொடுக்கப்படும் கால அவகாசம் பெண்ணை, தான் இழந்த பலத்தை திரும்ப பெறவும், பெற்ற குழந்தையை சரியாக வளர்க்கவும் உதவும். இதை விடுத்து யார் எக்கேடு கெட்டால், எனக்கென்ன என்று எண்ணி உடலுறவில் ஈடுபட்டால், உங்கள் மனைவி மரண வாயிலை நெருங்கலாம்; குழந்தை அன்னையின் அன்பு மற்றும் தாய்ப்பால் கிடைக்காமல் வளரும் நிலை ஏற்படலாம். ஆகையால் மிகுந்த கவனம் செலுத்தி தாயையும் சேயையும் இந்த காலகட்டத்தின் பொழுது பார்த்துக் கொள்வது கணவரின் கடமையாகும்.
மனநிலை தாய் 9 மாதங்கள் கருவில் சுமந்த குழந்தையின் மீது அதீத காதல் கொண்டிருப்பார்; அவரை குழந்தை பெற்ற பின் உடனே உடலுறவு கொள்ள அழைப்பது உங்கள் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தி விடும் அபாயம் தரக்கூடியது. மேலும் பெண் பெற்று எடுத்துள்ள குழந்தை உங்களின் வாரிசு; அது நல்ல முறையில் வளர சில தியானங்களை செய்து தான் ஆக வேண்டும்; சில உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். பிரசவத்தால் ஏற்கனேவே பெண்ணின் உடல் அதிகம் புண்பட்டு விட்டது; உடலுறவு எனும் பெயரால், அல்லது அதற்கு அழைத்து அவளது மனதையும் புண்படுத்தி விட வேண்டாம்.
அவளுக்கும் உணர்வுகள் உண்டு! மனைவியை பிரிந்து நீங்கள் தவிப்பது போல், கணவரை பிரிந்து மனைவியும் தான் தவிக்கிறாள் என்று புரிந்து கொள்ளுங்கள்; ஆணை விட பெண்ணுக்கு தான் உடலுறவு உணர்ச்சிகள் அதிகம் என்பதையும் மறவாமல் நினைவில் கொண்டு செயல்படுங்கள்! தேகம் சரியானதும், உடலில் பலம் வந்ததும் உங்கள் மனைவியே உங்களை கட்டியணைக்க, உங்கள் அணைப்பில் தான் பெற்ற வலிகளை மறக்க ஓடோடி வருவார் என்பதை நெஞ்சில் நிலை நிறுத்துங்கள்.!
எவ்வளவு காலம்? பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் முழுமையாக குணமடைய, பெண்ணின் உடல் சரியான – முன்பு கொண்டிருந்த பலம் பெற 3 முதல் நான்கு மாதங்கள் ஆகலாம்; ஆனால், மருத்துவ ரீதியாக தையல் காயம் ஆறுவதற்கு 4-6 வாரங்கள் எடுக்கும் என்றும், அந்த காலகட்டத்தில் பெண்கள் முழுநேர ஓய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், கணவனும் மனைவியும் பிரசவத்திற்கு பின் உங்கள் ஒட்டுமொத்த காதலை, நீங்கள் பெற்று எடுத்த குழந்தை 3-4 மாதங்கள் முழுவதுமாக அளித்து, பின்னர் நீங்கள் காதலுக்குள் விழ தயாராகுங்கள்! அது தான் மிகவும் சிறந்த செயல்!