பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்நாளில் சில காலங்களை பிறப்புறுப்பு பகுதியின் அரிப்பு தொல்லை இல்லாமல் கடந்து வந்திருக்க இயலாது; கடக்கவும் முடியாது. ஏனெனில் இது ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இந்த அரிப்பு எப்பொழுது ஏற்படும் எப்படி ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது; ஆனால், நேரங்கெட்ட நேரத்தில் ஏற்பட்டு நம்மை பாடாய் படுத்தும் என்பதை மட்டும் உறுதியாய் கூற இயலும்; அதாவது வண்டி ஓட்டும் பொழுது, பேருந்தில் பயணம் செய்யும் பொழுது, கோவிலில் இருக்கும் பொழுது என இடம், பொருள், ஏவல் என எதையும் கவனியாது இந்த அரிப்பு, பிறப்புறுப்பில் ஏற்படுகிறது.
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பில், அன்றைய நாள் முழுதும் வீணாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன; இப்படிப்பட்ட தொல்லை தரும் பிறப்புறுப்பு அரிப்பை ஏற்படுத்தும் காரணிகள் பல இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக நிறுத்தினால் மட்டுமே அந்த நாளினை வீணாக்காமல், மனஅழுத்தம், பதற்றம் இன்றி வெற்றிகரமாக வேலையை முடித்து அந்நாளை கடக்க இயலும். அந்த வகையில் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை உடனடியாக குணப்படுத்த எளிதில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும்; இயற்கையாக எளிதில் கிடைக்கும் பொருட்களில் எது பிறப்புறுப்பு அரிப்பைக் கட்டுப்படுத்தும் என்று அறிந்து செயல்படல் வேண்டும்.
இயற்கையாக எளிதில் கிடைப்பது நீர் தான் என்று கருதி, அடிக்கடி அதிகமாக பிறப்புறுப்பை கழுவிக் கொண்டே இருந்தால், அது பிறப்புறுப்பின் அரிப்பை கட்டுப்படுத்தாது, அதிகமாக்கி விடும் வாய்ப்புண்டு. இந்த பிறப்புறுப்பு அரிப்பிற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன; உதாரணத்திற்கு சுகாதாரமின்மை, உடைகளில் சுத்தமின்மை, நோய்த்தொற்றுகள் என பல காரணங்கள் உண்டு. எந்தக் காரணத்தால், பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டாலும், அதனை உடனடியாக போக்க உதவும் பதினோரு எளிய முறைகள் பற்றி படித்தறியலாம்.
பயம் வேண்டாம்! பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், முதலில் பெண்கள் தோன்றுவது பயம். ஆகையால், பயப்படாமல் ஏன் ஏற்படுகிறது, என்ன காரணமாக இருக்கும் என்று ஆலோசியுங்கள்; காரணம் பிடிபடவில்லை என்றால், அரிப்பை போக்கும் வீட்டு வைத்திய முறைகளை கையாளுங்கள். வைத்தியம் செய்தும் அரிப்பு நீங்காமல், தொடர்ந்து ஏற்பட்டால், பின் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். இந்த வழிமுறைகளை விடுத்து வீண் பயம் கொண்டால், அது உங்களுக்கு தேவையில்லாத பதற்றம் மற்றும் மனஅழுத்தத்தையே பரிசாக தரும்
குளிர்ந்த நீர் பொதுவாக உடல் அதிக சூடாகினால், அதிலும் முக்கியமாக பிறப்புறுப்பு சூடானால், உடலில் மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை உடனடியாக போக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தி அந்த சூட்டைக் குறைக்க முயலுங்கள். குளிக்கும் பொழுது காலில் இருந்து நீரை ஊற்றத் தொடங்கி, படிப்படியாக உடல் முழுதும் நீரை ஊற்றவும். இது உடலின் சூடு உடனடியாக வெளியேற உதவும்; இதைவிடுத்து நேரடியாக பிறப்புறுப்பில் அல்லது அதன் மீது தண்ணீரை அள்ளிக் கொட்டுவது என்பது கூடாது.
மேக்கப் உங்கள் பிறப்புறுப்பில் வாசனை ஏற்படுத்தும் நல்ல மணம் கொண்ட பவுடர் அல்லது வாசனை திரவியம் போன்றவற்றை பூசியிருந்தால், நறுமணமிக்க சோப்பை பயன்படுத்தி இருந்தால், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, வெறும் நீரால் பிறப்புறுப்பை நன்கு கழுவி, லேசான – சாதாரண சோப்பை பயன்படுத்தி மீண்டும் நீரினால் நன்கு கழுவி சோப்பு முழுதையும் முழுவதுமாக அகற்றி விடுதல் வேண்டும். சென்ட், பவுடர் போன்ற மேக்கப் பொருட்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
உடைகள் உடலில் அணியும் பிறப்புறுப்பை தொடும் ஆடைகள் சுத்தமானது தானா என்று சோதித்து அணியவும். துணிகளை துவைத்து உடுத்தவும்; மேலும் இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் அணிவதை தவிர்த்தல் நல்லது. இறுக்கமான ஆடைகளை அணியும் பொழுது உடல் உறுப்பிற்கு, முக்கியமாக பிறப்புறுப்பிற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போய், கடுப்புகள்,அரிப்புகள் போன்றவை ஏற்பட்டு விடுகின்றன; எனவே, இவ்வகை ஆடைகளை தவிர்த்தல் வேண்டும்.
ஆப்பிள் சிடர் வினிகர் குளியல் குளியல் தொட்டியில், மூழ்கிக் குளிக்கும் தொட்டியில் அரை கப் இந்த ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து, காலை நன்கு விரித்து வைத்து, வினிகர் கலந்த தண்ணீர் நன்கு பிறப்புறுப்பில் படும்படியாக குளிக்க வேண்டும். இவ்வாறு குளித்தால், வினிகரில் இருக்கும் பலத்த pH அமில கூறுகள், பிறப்புறுப்பின் அரிப்பை உடனடியாக போக்கிட உதவும்.
அரிக்க வேண்டாம்! பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் பொழுது அரிக்காமல் விட்டுவிடுவது நல்லது. அரிக்கும் பொழுது அரிக்க வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனமாக தான் இருக்கும்; ஆனால், அரிக்காமல் விடுவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பைக் குறைத்து, விரைவில் அதை தானாகவே மறைய செய்யும். அறிக்கை வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் பொழுது, உங்கள் மனதை வேறுபக்கம் திசை திருப்பி, இதைக் குறித்து எண்ணாமல் இருக்க முயல வேண்டும்.
தூங்கும் போது வேண்டாம்.! இரவு உறங்கும் பொழுது உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் எதுவும் அணியாமல், பருத்தி ஆடைகளை அணிந்து, சற்று தளர்வான சூழலில் உறங்குவது நல்லது. ஏனெனில் இரவில் உள்ளாடைகள் அணியாமல் இருப்பதால், பிறப்புறுப்பு சற்று காற்றோட்டமாக இருக்கும்; அதன் மீது காற்று படும் பொழுது, அக்காற்று அங்கு அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
ஒத்தடம் ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தடம் அளிக்க வேண்டும்; அதாவது ஐஸ் கட்டிகளை ஒரு தூய்மையான துணியால் சுற்றி, சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த ஐஸ்கட்டி அடங்கிய துணியை பிறப்புறுப்பில் வைத்து ஒத்தடம் அளிக்க வேண்டும். இது அரிப்பை குறைத்து, இதமான உணர்வை பிறப்புறுப்பில் ஏற்படுத்த உதவும். தயிர் அல்லது யோகார்ட்டை பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் இடத்தில தேய்த்து, அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைத்து, ஒத்தடம் போன்று அளித்து பிறப்புறுப்பு அரிப்பிலிருந்து விடுபடலாம்.
உடலுறவு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டு, என்னதான் அரித்து பார்த்தாலும் அரிப்பு நீங்காத பட்சத்தில், திருமணமான பெண்கள் தன் துணியை தேடுவதுண்டு. ஏனெனில், பிறப்புறுப்பில் சாதாரணமாக ஏற்படும் அரிப்பை அவர்கள் உடலுறவு உணர்ச்சியாக எண்ணி கணவரை அழைக்க ஆரம்பித்துவிடுவர்; ஆனால் இது மிகவும் தவறான செயல். இந்த மாதிரியான பிறப்புறுப்பு அரிப்பு நேரத்தில் உடலுறவு கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.