பெண்கள் பாலியல் தகவல் :உடலுறவில் ஆண்கள் எந்த அளவு ஆர்வம் செலுத்துவார்களோ அதே அளவு பெண்களும் செலுத்துவார்கள். ஆனால் உடலுறவில் உச்சக்கட்டம் என்பத்து ஆண்களை காட்டிலும் விட பெண்களுக்கு மிக குறைவாகவே ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு நாளடைவில் அதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனையாகும்.
பெண்களுக்கு உறவில் உச்சக்கட்டம் ஏற்படாமல் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. பல பெண்கள் தங்கள் பாலியல் பிரச்சினைகளை மருத்துவர்களிடம் பகிர்ந்துகொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் அதுதான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டால்தான் அதற்கான தீர்வை நோக்கி நகர முடியும். அந்த தீர்விற்கான ஆரம்பம்தான் இது.
காரணங்கள் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. உடல்ரீதியான காரணங்கள் சர்க்கரை நோய், இதய நோய், நரம்பியல் கோளாறுகள், ஹார்மோன்கள் சமநிலையின்மை, மாதவிடாய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக வியாதிகள், மதுப்பழக்கம் என பல காரணங்கள் இருக்கும். மனரீதியான பிரச்சினைகள் என வரும்போது மனஅழுத்தம், பதட்டம், கடந்தகால மோசமான அனுபவம், பயம், உறவு சிக்கல்கள் என உளவியல் ரீதியாகவும் பாலியல் செயல்திறன் பாதிப்படையலாம்.
யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? பாலியல் செயலிழப்பிற்கு ஆண், பெண் என்ற வேறுபாடே இல்லை. குறிப்பாக வயதானவர்கள் பாலியல் செயலிழப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் உடல் வலிமை, வயது மற்றும் நோய்கள் போன்றவையாகவும் இருக்கலாம்.
பாதிப்புகள் பொதுவாக பெண்களுக்கு நன்கு வகையான பாலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவை பாலியல் ஆசையின்மை, உணர்ச்சிகள் தூண்டப்படாதது, உச்சக்கட்டம் இன்மை மற்றும் வலிமிகுந்த உடலுறவு. இந்த நான்கு பிரச்சினைகளே பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு ஏற்பட காரணமாகும்.
பாலியல் ஆசையின்மை செக்ஸில் ஆர்வமின்மை பாலியல் செயலிழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பிட்ட நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், கர்ப்பகாலம், சோர்வு ஏன் உங்கள் வாழ்க்கை முறைகூட சில நேரங்களில் உறவின் மீதான உங்கள் ஆர்வத்தை குறைக்கலாம், அல்லது வழக்கமான உறவு நிலைகள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
உணர்ச்சியின்மை பெண்களின் பிறப்புறுப்பில் போதுமான ஈரமின்மை இல்லாதது உங்கள் உணர்ச்சிகளை தூண்டப்படாத நிலை ஏற்படலாம், இதுவே உணர்ச்சியின்மை நிலை எனப்படும். பெரும்பாலும் மனஅழுத்தம் போதிய தூண்டுதல்கள் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். பிறப்புறுப்பிற்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாததும் இதற்கான காரணமாகும்.
உச்சக்கட்டம் பாலியலில் உச்சக்கட்டம் இல்லாத நிலை அனர்கோஸ்மியா எனப்படுகிறது. அனர்கோஸ்மியா ஏற்பட உடல்ரீதியாக அனுபவமின்மை, போதிய அறிவின்மை என பல காரணங்கள் உள்ளது. உளவியல்ரீதியாக குற்ற உணர்ச்சி, முந்தைய மோசமான அனுபவங்கள், பதட்டம் என காரணங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. போதிய தூண்டுதலின்மை, மாத்திரைகள் கூட காரணமாய் இருக்கலாம்.
வலிமிகுந்த உடலுறவு வலிமிகு உடலுறவு என்பது பிறப்புறுப்பில் போதிய நீர்சத்தின்மை, இடுப்பு வலி, என்டோமேஸ்ட்ரோசிஸ், அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட காயம் என பல காரணங்களால் ஏற்படுகிறது. யோனியை சுற்றியுள்ள தசைகள் வலிப்பது அது வாக்னிஸ்மாஸ் என்று அழைக்கப்படுகிறது. உடலுறவு சார்ந்த பயங்களோ அல்லது நோய்களோ இருப்பின் அது வலியை மேலும் அதிகரிக்கும்.
எவ்வாறு கண்டறிவது? பெண்களின் பாலியல் செயலிழப்பு என்பது உடல் சோதனை மற்றும் அறிகுறிகள் மூலம் கண்டறியப்படுகிறது. மார்பக பரிசோதனை செய்யும்போதே பாலியல் தொடர்பான மற்ற சோதனைகளை செய்துகொள்வது நல்லது. மற்ற சோதனைகள் மூலம் பாலியல் செயலிழப்பை பற்றி அறிந்துகொள்ளலாம். மருத்துவர்கள் செக்ஸ் தொடர்பான உங்கள் பார்வை, கடந்தகால அனுபவங்கள், உறவுச்சிக்கல்கள் போன்றவற்றை பற்றி கேட்கலாம். ஏனெனில் இவை உங்கள் பாலியல் செயலிழப்பு காரணமாக இருக்கக்கூடும்
எவ்வாறு குணப்படுத்தலாம்? பாலியல் செயலிழப்பை உடரீதியாக மற்றும் உளவியல்ரீதியாக குணப்படுத்த முடியும். நோயாளியிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை பொருத்து பாலியல் செயலிழப்பை விரைவில் குணப்படுத்தலாம். இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரின் பங்களிப்பும் வேண்டும்.
எவ்வாறு குணப்படுத்தலாம்? பாலியல் செயலிழப்பை உடரீதியாக மற்றும் உளவியல்ரீதியாக குணப்படுத்த முடியும். நோயாளியிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை பொருத்து பாலியல் செயலிழப்பை விரைவில் குணப்படுத்தலாம். இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரின் பங்களிப்பும் வேண்டும்.
கற்றுக்கொடுத்தல் நோயாளிக்கு போதுமான அளவு உடலுறவை பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும் சொல்லித்தருவது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்கும். உடலுறவு செயல்பாடுகளை கற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல பதிலளிப்பது விரைவில் பாலியல் செயலிழப்பை குணமாக்கும்.
திசைதிருப்பல்கள் பதட்டம் மற்றும் பயத்தை திசைதிருப்பவதே நல்லது. பாடல்கள், நடனம் மற்றும் வீடியோக்கள் என உங்கள் பதட்டத்தை திசைதிருப்ப ஏராளமான வசதிகள் உள்ளது. இந்த திசைதிருப்பல் உங்கள் பதட்டத்தை குறைத்து உறவில் உங்கள் கவனத்தை செலுத்த உதவும்.
வலியை குறைத்தல் பாலியல் செயலிழப்பு ஏற்பட ஒருவேளை வலி காரணமாக இருந்தால் உங்கள் உறவு கொள்ளும் முறைகளை மாற்றுவது வலியை குறைக்கக்கூடும். யோனியில் ஏற்படும் உராய்வு வலியை குறைக்கும் வகையில் உறவுக்கும் முன் சூடான குளியல், தியானம் போன்றவை வலியை குறைக்கலாம்.
குணப்படுத்த முடியுமா? பெண்களுக்கு பாலியல் செயலிழப்பை குணப்படுத்துவதற்கு அதன் காரணத்தை அறிந்து கொள்வது என்பது முக்கியமானது. ஒருவேளை இது உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையெனில் குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை உளவியல்ரீதியான பிரச்சினையாக இருந்தால் கவுன்சிலிங், கணவன் மனைவிக்கிடையேயான தொடர்பு போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம்
ஹார்மோன்கள் பிரச்சினை பெண்களின் பாலியல் செயல்பாட்டில் ஹார்மோன்கள் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் வயதிற்கேற்ப அவர்களின் ஈஸ்ட்ரோஜென்களின் சுரப்பு குறையும், இது பிறப்புறுப்பில் நீரின் அளவை குறைக்கும் எனவே உறவில் ஈடுபடும்போது அதிக வலி ஏற்படும். ஆண்களின் குறைவான டெஸ்டோஸ்டிரோன் கூட பெண்களின் உணர்ச்சி மற்றும் உச்சக்கட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.