அனைத்து ஆண்களுக்குமே தங்களின் பாலியல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை இருக்கும். பருவயது முதலே தங்களின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இருப்பினும் இளைஞர்களிடையே பாலியல் செயல்தின் குறைவு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது. அதற்காக பல மருந்துகளையும், மாத்திரைகளையும் உபயோகப்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை மேலும் இழக்கிறார்கள். அதற்கு மாற்றாக பக்க விளைவுகள் இல்லாத பாலியல் செயல்திறனை அதிகரிக்க கூடிய ஒரு இயற்கை பொருள் உள்ளது அதுதான் இளநீர்.
உண்மைதான் இளநீரை சாதாரணமாக குடித்தால் உங்களுக்கு கிடைப்பது புத்துணர்ச்சி மற்றும் உடலுக்கு தேவையான நீர்சத்துதான். ஆனால் இது மற்றொரு பொருளுடன் இணையும்போது அது உங்களின் நரம்புகளிளிலும், இரத்த ஓட்டத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு இயற்கை வயகரா போல செயல்படும். அந்த மற்றொரு பொருள்தான் கற்றாழை.
இளநீர் இளநீர் குடிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த மற்றும் நன்மை பயக்கும் பொருளாகும். இளநீர் குடிப்பது பல நன்மைகளை தரக்கூடியது. தாய்ப்பாலிற்கு பிறகு இயற்கையாக எந்தவித கலப்படமும் இன்றி கிடைக்கும் ஒரு பொருள் இளநீராகும். இளநீர் பல சத்துக்களை கொண்டிருந்தாலும் பலரும் அறியாத ஒரு செய்தி இளநீர் ஒரு வயகரா என்பதுதான்
இரத்த ஓட்டம் இளநீரை தினமும் குடித்து வர உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் அது மட்டுமின்றி இளநீர் உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்யவல்லது.
சிறுநீரக செயல்பாடு இளநீர் உங்கள் சிறுநீரகங்கள் மீது அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. இளநீரில் உள்ள அதிகளவு பொட்டாசியம் உங்கள் சிறுநீரகங்களை ஒழுங்காக செய்லபட வைக்கும். அது மட்டுமின்றி தினமும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்துவர உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையத் தொடங்கும்.
எடை குறைதல் இளநீர் எடை குறைத்தலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் எந்தவித தீய கொழுப்புகளும் இல்லை அதே சமயம் கலோரிகள் மிக குறைந்த அளவில் உள்ள பானமாகும். உணவு உண்பதற்கு முன் இளநீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் அளவை பெருமளவில் குறைக்கும். மேலும் இதிலுள்ள அதிகளவு சோடியம் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
கற்றாழை கற்றாழை ஒரு இயற்கை மூலிகை. இது இயற்கை நமக்கு அளித்த வரமாகும். பெரும்பாலும் அனைத்து அழகுசாதன பொருட்களிலும் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஆன்டிபாக்டீரியா சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுகிறது. மேலும் காயங்களை குணப்படுத்தவும், கொழுப்பு அளவை குறைக்கவும் பயன்படுகிது. இவை மட்டுமின்றி இது இளநீருடன் இணையும்போது பாலியல் திறனை உடனடியாக அதிகரித்து இயற்கை வயகரா போல செயல்படக் கூடியது.
புற்றுநோய் புற்றுநோய் செல்களை அழிப்பதில் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இது மனிதனுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியது. கற்றாழை எதிர்ப்பு அழற்சி பண்புகளை வெளிப்படுத்துகிறது மேலும் தேவையற்ற டி.என்.ஏ. மாற்றங்களை தடுக்கிறது.
இளநீர்- கற்றாழை இயற்கை வயகரா முன்பே கூறியது போல இளநீர் மற்றும் கற்றாழை தனித்தனியாக பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் அவை இணையும்போது நமது பாலியல் செயல்திறனை மிக அதிக அளவில் அதிகரிக்கும். இந்த இயற்கை வயகரா செய்வது மிகவும் எளிமையானது. அதற்கு தேவை ஒரு இளநீர், 50கி கற்றாழை மற்றும் சர்க்கரை. இளநீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். கற்றாழையை வெட்டி சுத்தம் செய்து அதன் உட்புறத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கற்றாழையை இளநீரில் போட்டு அதனை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்பொழுது அது ஒரு ஜெல் போன்று காட்சியளிக்கும். உங்களுக்கு கசப்பு சுவை பிடிக்கவில்லையெனில் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.