Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் உதடு உங்களை சுண்டி இழுக்குதா? இப்படி செய்யுங்க

பெண்கள் உதடு உங்களை சுண்டி இழுக்குதா? இப்படி செய்யுங்க

351

பெண்கள் உதடு:பொதுவாக உதடுகள் நன்கு சரியான வடிவமைப்பில் அழகாக, மற்றவரைக் கவரும் வகையில் இருந்தால் தான், எளிதில் முத்தத்தைப் பெற முடியும். அவ்வாறு அழகான உதட்டை ஒருசிலர் மட்டுமே பெற்றுள்ளனர். சிலருக்கு இத்தகைய உதடுகள் இருக்காது. ஆனால் இவற்றை ஒருசில உதட்டு பராமரிப்புகள் மூலம் பெற முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களையும், முறையான ஒருசில செயல்களையும் செய்தாலே, அழகான உதட்டைப பெற முடியும்.

அதிலும் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், உதட்டைப் பராமரிப்பதற்கு லிப் லைனர், லிப்ஸ்டிக் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். சிலரோ இன்னும் அழகாக உதடுகள் இருப்பதற்கு, அதிகப்படியான மேக்-கப் போடுவார்கள். ஆனால் இயற்கையிலேயே அழகான உதடுகளைப் பெறுவதற்கு, முறையான பராமரிப்புக்கள் இருந்தாலே போதுமானது.

உதாரணமாக, உதட்டிற்கு ஸ்கரப், உதட்டிற்கான உடற்பயிற்சி செய்வது, உதட்டிற்கு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல் எண்ணெயை பயன்படுத்துவது போன்றவற்றை செய்து வர வேண்டும். இப்போது பார்த்தவுடன் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் வகையிலான உதட்டைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி வாருங்கள்.

ரிலாக்ஸ்

உதட்டை எப்போதுமே இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல், சாதாரணமாக விட வேண்டும். இல்லையெனில் உதட்டைச் சுற்றி சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிடும். அவ்வாறு சுருக்கங்கள் வந்தால், உதடே பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படும். எனவே உதட்டை எப்போதும் சாதாரண நிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை ஸ்கரப்

உதடு கருப்பாக இருப்பதற்கு ஒரு காரணம், உதடுகளில் இறந்த செல்கள் அப்படியே தங்குவதே ஆகும். எனவே அத்தகைய இறந்த செல்களை நீக்குவதற்கு, உதட்டிற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதுவும் வீட்டில் உள்ள சர்க்கரையை எடுத்து, உதட்டில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் பொலிவோடு இருக்கும்.

எச்சில் வைப்பது

ஸ்கரப் செய்த பின்னர் உதடு ஒருவித வறட்சியோடு இருப்பது போன்று இருந்தால், அப்போது உதட்டை நாக்கால் துடைக்க வேண்டும். ஏனெனில் எச்சிலானது ஒரு சிறந்த கிருமிநாசினி. எனவே இவ்வாறு செய்யும் போது உதட்டில் எந்த ஒரு நோயும் தாக்காமல் இருப்பதோடு, எந்த ஒரு காயமும் ஏற்படாமல் இருக்கும்.

தேன்

தேன் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர். எனவே உதட்டில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு, உதட்டிற்கு தேனைத் தடவி வந்தால், உதடுகள் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.

புகைப்பிடித்தல்

உதட்டின் நிறத்தை கருப்பாக மாற்றுவதற்கும், வறட்சியடைவதற்கும் புகைப்பிடிப்பது ஒரு காரணம். எனவே அழகான உதடுகள் வேண்டுமெனில் புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

உடலிலேயே உதடுகள் தான் மிகவும் மெல்லிய மற்றும் மென்மையான பகுதி. எனவே தான் உதடுகளில் அதிகப்படியான சூரியக்கதிர்களால் படுவதால் எளிதில் பாதிப்படைகின்றன. எனவே வெயிலில் செல்லும் போது, உதட்டிற்கு தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு செல்ல வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லி உதட்டைப் பொலிவடையச் செய்யும் பொருட்களுள் ஒன்று. மேலும் இது உதட்டை பொலிவடையச் செய்வதோடு, உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் மிகவும் சிறந்தது.

எலுமிச்சை

உதடுகள் கருமை நிறத்தில் இருந்தால், அவற்றைப் போக்குவதற்கு எலுமிச்சைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள். எனவே இதனை உதட்டிற்குப் பயன்படுத்தும் போது, உதடுகள் வெளிர் நிறத்தில் மாறிவிடும்.

உதடு பயிற்சி

தினமும் உதட்டிற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது உதடுகளை குவித்து பின் ரிலாஸ் செய்ய வேண்டும். இதேப் போன்று தினமும் 20 முறை செய்து வந்தால், உதடுகள் நன்கு அழகாக இருக்கும்.

சிரிப்பு

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது போல், நல்ல சிரிப்பு முகத்தை அழகாக வைப்பதோடு, உதடுகளில் சுருக்கங்கள் ஏற்படாமல், உதடுகளை அழகாக வைக்கும்.