இரகசியகேள்வி-பதில்:என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச
கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து
கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?
உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும்.
பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை
சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற
சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது.
இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம்
எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல்
இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை
ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன்
பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.
பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக
அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி
அடைந்து விடுகிறது. என்ன காரணம்?
இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும்
யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல்,
உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த
சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி
உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான
தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால்
உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.
கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும்
பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்கிறார்களே, உண்மையா? ஆம் எனில் எதனால்?
இந்த கருத்து உண்மையல்ல. ஒரு பெண்ணின் உடம்பில் முடிஅதிகமாக இருக்ககாரணம்
அந்த பெண்ணின் உடம்பு அமைப்பும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன்
குறைபாட்டினாலும் அதிகமாக முடியிருக்கலாம். இது முடி அளவுக்கும்
காமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என்
மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி
திருப்திபடுத்தலாம்?
திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது.
ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி
தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப்
பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று
நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து
கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி
திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட
வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை
நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்திப்படுத்த வேண்டும்.
————————————————
செக்ஸ் சிந்தனைகளை மேற்கொள்வது எப்படி?
இன்றைய அதிவேக மொபைல் உலகில் அனைத்தும் விரல்நுனியில் இருக்கையில், இதுபோன்ற சில கேள்விகளுக்கான விடைகாணுவதில் மனிதன் என்றுமே தடுமாறத்தான் செய்கிறான். இன்று இணைய உலகில் நாம் விரும்பாமலேயே தவறான வலைதளங்கள் மற்றும் வீடியோக்கள் நம் பார்வைக்கு வரும் சூழலில் பல விதங்களில் நம் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு அதற்கான வடிகால் என்ன என்று அனேகர் யோசித்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். மற்றொரு பக்கத்தில் செக்ஸ் என்றாலே அது தப்பான காரியம் என்ற தவறான சிந்தனையில் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர்.
பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு நல்ல நோக்கத்தில் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக அணுகும்போது அது மனுக்குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செக்ஸ் சிந்தனைகள் வருவது இயல்பு என்றாலும் அதை சரியான விதத்தில் அணுகுவதிலேயே முதிர்ச்சி வெளிப்படும்.
பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தன் எஜமானனின் மனைவியால் தவறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தப் பட்ட போது “என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அவ்வாலிபன் விலகி ஓடினான். ஆம் தவறான உறவுகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவனைப் படைத்த இறைவனுக்கும் எதிரான செயலே. பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுவதே மிகவும் ஞானமான செயல். ஆனால் தொடர்ந்து அப்படிப் பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் மேல் தாமரையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
என் தலைக்கு மேல் பறவை பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அந்த பறவை கூடு கட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்று ஒருவர் சொன்னது போல, நீங்கள் நினைத்தால், பாலியல் சிந்தனை உங்களை ஆக்ரமித்துக் கொள்ளாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது முழுமையாக உங்களை ஆட்கொண்டுவிடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் முன்னுரிமைப் பட்டியல்களில் தெளிவாக இருங்கள்.
———————————-
சுய புணர்ச்சி செய்யலாமா?
கேள்வி: நான் அடிக்கடி பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு சுயபுணர்ச்சி (Masturbation) செய்கிறேன். இது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டாகுமா?
ஆசையை அடக்க முடியாமல், அதற்கு வடிகாலாக சுய புணர்ச்சி செய்வதை அனேகர் ஆதரிக்கின்றனர். சில மருத்துவர்களும் கூட இதில் தவறேதும் இல்லை என்கின்றனர். சுய புணர்ச்சி செய்வதால் பெரிய பாவம் செய்வதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூட சிலர் சொல்கின்றனர்.
பாலியல் உணர்வுகள் என்பது மனிதர் எல்லாருக்கும் உண்டு. அதின் அளவு வித்தியாசப்படலாம். நம் சரீரத்திற்கு பசி ஏற்படுவதைப் போலவே பாலியல் உணர்வுகளும் உண்டாகிறது. பசிக்கிறது என்பதற்காக நாம் கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுவதில்லை. பாலியல் உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அதே அணுகுமுறையைக் கடை பிடித்தலே சிறந்தது ஆகும்.
சுய புணர்ச்சி செய்பவர்கள் பெரும்பாலும் இனம் புரியாத ஒரு வித குற்ற உணர்வுடனேயே இருக்கின்றனர். ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று இயேசு சொன்னார். அனேகர் சுய புணர்ச்சி செய்கையில் Virtual உலகில் யாரையோ நினைத்துக் கொண்டுதான் அச்செயலைச் செய்கின்றனர். அல்லது அப்படிப் பட்ட வீடியோ, படங்கள் அல்லது கதைகள் ஏதாகிலும் ஒன்றால் தூண்டப்பட்டு இயங்குகின்றனர். ஆகவேதான் சுய புணர்ச்சி செய்வது தவறு என்று சொல்கிறேன்.
இன்று ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, சுய புணர்ச்சி செய்யாதவர்கள் யார்? என்று சிலர் நினைக்கலாம். நாம் கண்டதையும் சாப்பிட்டால் அதன் பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதேபோலவே நம் பாலியல் உணர்வுகளுக்கு சரியான ஆகாரத்தை, தகுதியான ஆகாரத்தைக் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை இன்புறும்.
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்ற பைபிள் வாசகத்தை மனதில் இருத்துவோம். சுய புணர்ச்சி போன்ற பழக்க வழக்கங்கள் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது. அதைச் செய்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்து, செய்து முடித்த பின் குற்ற உணர்வுடன் இருப்பதைக் காட்டிலும், செய்யாமல் இருப்பதே மேல்.
நான் பல நாட்களாக இதைச் செய்துவருகிறேன். திடீரென்று எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழலாம். பொதுவாக பாலியல் உணர்வு தானாக எவருக்கும் உண்டாவதில்லை. நம் சிந்தனைகளிலோ அல்லது நாம் எதையாவது பார்ப்பதினாலோ அல்லது வாசிப்பதினாலேயே உண்டாகிறது. நாம் மனதில் பாலியல் உணர்வு உண்டாக்கக் கூடிய செயல்களில் கவனம் செலுத்தாமல், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள காரியங்களில் கவனம் செலுத்தலாம்.
An empty mind is devil’s workshop என்று சொல்வார்கள் அல்லவா. ஆகவே நம் மனதை தகுதியான காரியங்களினால் நிரப்புவோம். பைபிள் வசனங்களினாலும் பக்திக்குரிய காரியங்களினாலும் நிரப்புங்கள் என்று சொல்ல மாட்டேன். மாறாக அத்துடன் இந்த உலகில் நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் உள்ளன. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். உங்கள் சரீர புத்துணர்ச்சிக்காக எதாகிலும் கால்ப்பந்து, வாலிபால் போன்ற எதாகிலும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவைகளைச் செய்யும்போது உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.
————————————-