உடலுறவு தேவையா என்ற கேள்விக்கு பதில் அனைவருக்குமே தெரியும்…..சரி அது எப்பொழுது தேவை ? எதற்காக தேவைப்படுகிறது? அதனால் நன்மைகள் என்ன? இது போன்ற பல கேள்விகளை நம் மனதில் நாமே கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைத்து விடும்
திருமணத்திற்கு முன் காதல் கொள்ளும் போது இருக்ககூடிய ஆர்வமும்,அன்பின் மிகுதியால் வரக்கூடிய ஊடலும், திருமணத்திற்கு பிறகு இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை ….
திருமணத்திற்கு முன் எப்போது தான் திருமணம் நடக்குமோ என ஆவல் கொண்டவர்கள் திருமணத்திற்கு பின் எதுக்குதான் திருமணம் செய்துகொண்டோமோ என நினைக்கும் அளவிற்கு பல மாற்றங்களை தம்பதியினர் உணர்கின்றனர்
இன்றைய காலக்கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் அவர்களால் உடலளவில் கூட இணைய முடிவதில்லை. இப்படி இணையாமல் இருப்பதால் மனக்கசப்புகள் அதிகமாகும். அதுமட்டும் இல்லை ஒரு முத்தம் கொடுக்கும் அளவிற்கு கூட நேரமும் மனநிலையும் இல்லைத அளவிற்கு தான் இன்றைய வாழ்க்கை முறை உள்ளது என்றே கூறலாம்
தம்பதிகள் சண்டை இல்லமால் ஒருமித்து மகிழ்ச்சியாக இருக்க சிறந்த மருந்து எது தெரியுமா ?
சரி…ஒரு மாதத்துக்கு எத்தனை முறை உடலால் இணைய வேண்டும் என்பதை பார்கலாமா…..
அதாவது ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 11 முறை உடலுறுவு கொள்ளலாம். அது ஆண், பெண் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது திருமணமானவர்களு
க்கு நன்கு தெரியும்
ஆண், பெண் இருவரும் உடலளவில் இணைந்திருப்பதும் மனதளவில் ஒத்திருப்பதும் மிக அவசியம்.அதனால் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் உடலளவில் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் வைத்திருப்பது நல்லது…..
வாரத்துக்கு குறைந்தது 3 நாட்களும் மாதத்துக்கு 11 நாட்களும் என்பது மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கை தான். அதையாவது விட்டுவிடாமல் ஆண் பெண் இருவரும் இன்பமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
பொதுவாகவே தம்பதிகள் இடையில் அதிக அளவில் பிரச்னை வருவதற்கு காரணம் அவர்கள் இருவருக்கும் இடையில் சரியான இடைவெளியில் தாம்பத்தியம் நடக்காமல் இருப்பதே என்பதை தம்பதிகள் யோசித்து பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும் ….
– அனைவருக்கும் பகிருங்கள்