தமிழ் டாக்டர் ..,இன்பப் பயணம் என்றாலும் உடலுறவு என்பது தன்னுடனே சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்பது உண்மைதான். எனினும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உச்சகட்டமாக, உடலுறவால் மரணம் ஏற்படுவதுமுண்டு. தோராயமாக, 0.6% திடீர் மரணங்களுக்கு உடலுறவு காரணமாக உள்ளது.
இருவரும் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் சமயத்தில் மரணம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலுக்கு அதீத சிரமம் ஏற்படுவதால் மரணம் நிகழலாம் அல்லது வேறு ஏதேனும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளின் காரணமாகவும் மரணம் ஏற்படலாம்.
பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில், பங்கேற்றவர்களில் 2.2% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எப்படி நிகழ்கிறது (The Plausible Mechanism)
ஆண்களில், உடலுறவின்போது ஆணுறுப்பு விறைத்து (வழக்கமாக தளர்ந்து இருக்கும் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைய ஏதுவாக கடினமாகும்) விந்து வெளியேறும் (ஆணுறுப்பில் இருந்து சிறுநீர்க் குழாய் வழியாக விந்து வேகமாக அதிக விசையுடன் வெளியேறும்).
உணர்வு மற்றும் மனத் தூண்டுதல்களால் விறைப்பு ஏற்படுகிறது. பாலியல் கிளர்ச்சி ஏற்படும்போது, நரம்புகள் செய்திகளை அனுப்பி ஆணுறுப்பைத் தூண்டுகின்றன. இதனால் ஆணுறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதனால் ஆணுறுப்பு விரிவடைந்து விறைக்கிறது. பாலியல் கிளர்ச்சி உச்சமடையும்போது, விந்து வெளியேற்றம் நடக்கிறது.
உடலுறவின்போது திடீரென்று மாரடைப்பு ஏற்படுவதால் மரணம் ஏற்படலாம். உடலுறவின் போது இதயத்திற்கு அனுப்பப்படும் செய்திகள் (மின் உந்துதல்கள்) தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
பிற காரணங்கள் (What are the other causes?)
பிற காரணங்களில் சில:
லேட்டக்ஸ் ஒவ்வாமை: லேட்டக்ஸ் ஆணுறைகளுக்கு ஒவ்வாமை கொண்டவர்களுக்கு, தோல் தடிப்பு, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படலாம்.பெரும்பாலும் இந்த எதிர்விளைவுகள் லேசாகவே இருக்கும். எனினும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் லேட்டக்ஸ் ஒவ்வாமை ஏற்பட்டால் எதிர்விளைவுகள் தீவிரமாகி மரணமும் ஏற்படலாம்.
உடலுறவுக் கிளர்ச்சியைத் தூண்டும் சுவாசம் (“பரீத் ப்ளே” அல்லது “அஸ்ஃபிக்சியோஃபிலியா”): சிலர் தனியாகவோ அல்லது இணையருடனோ பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஏதேனும் சாதனம்/கருவியைப் பயன்படுத்துகின்றனர்.நெஞ்சு அல்லது தொண்டையை கைகள் அல்லது ஏதேனும் பட்டைகளைப் பயன்படுத்தி இறுக்குதல் அல்லது பிளாஸ்டிக் பை, முகமூடி, கை, தலையணை போன்ற பொருள்களைக் கொண்டு மூக்கு அல்லது வாயை மூடுதல், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவைக் குறைக்கும் வகையிலான வாயுக்கள் அல்லது வேதிப்பொருள்களை முகர்தல் போன்ற செயல்களும் இந்த வகையறாவே. மூச்சு தடைபடுவதால் ஏற்படும் ஒருவித அனுபவத்தை இவர்கள் ரசித்து மகிழ்வார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது தற்செயலாக மரணம் சம்பவிக்கலாம், அது தற்கொலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், ஏதேனும் மருந்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அல்லது பெரிய நோயிலிருந்து குணமடைந்துகொண்டு வருகிறீர்கள் என்றால் உடலுறவு செயல்களில் ஈடுபடும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.