Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முடி உடைய காரணம் என்ன ?

பெண்களின் முடி உடைய காரணம் என்ன ?

29

பெண்களின் முடி உடைய காரணம் என்ன ?
பெண்கள் அழகில் முக்கிய பங்குவகிப்பது கூந்தல், இது குளித்து வந்த பிறகு ஈராத்துடன் இருப்பதால் அதிக அளவில் உதிரும் இதனை உதிராமல் பாதுகாத்துக்கொள்ள இதோ சில வழிமுறைகள்.

பெண்கள் அழகில் முக்கியத்துவம் வாய்ந்தது கூந்தல் தான். அதனை பராமரிக்க அவர்கள் படும்பாடு இருக்கே ரொம்பவே கஷ்டமான விஷயம்.

அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதுக்குள், அவர்களும் ஒரு வழியாகியாகிவிடுவார்கள், கூட இருக்கும் நம்மையும் ஒருவழியாக்கி விடுவார்கள்.

இதுபோன்று அவசரமாகக் கிளம்பும்போது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி மறந்தே போய்விடுவார்கள், நாம் எப்படியாவது கிளம்பினால் போதும் என்று நினைத்து செய்யும் தவறால் தலை முடி அதிகளவில் உதிரும்.

இதுபோன்ற கஷ்டமான நேரத்தில் செய்யும் தவறில் இருந்து, நம் தலைமுடியை எப்படி காப்பது? என்பதுக்கான சில வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும் தலைமுடி சேதமடைவதிலிருந்து காப்பாற்ற முடியும்.

குளித்து முடித்த பின்பு தலை முடியைப் பற்றிய கவலைபடாமல். குளிக்கும் போதே கவனம் செலுத்தினால் போதும்.

* குளித்து முடித்தபின் ஸ்டைலிங் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். இதன் மூலம் தலைமுடி சிக்கல் விழாமல் தடுக்கப்படும்.

* தலையைத் துவட்டும் போது, டவலால் அழுத்தித் துவட்டக்கூடாது. ஈரமான கூந்தலை அழுத்தித் துவட்டும் போது, முடி எளிதில் உதிர்ந்துவிடும்.

* ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் மறந்துவிடுங்கள். முடிந்த வரை கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடவேண்டும்.

* அடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈர முடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும் போது முடி உதிர்வது அதிகமாகும்.