மனிதனின் வாழ்க்கையில் செக்ஸ் என்பதும் ஒரு பகுதியாக உள்ளது. இதை அளவுக்கு அதிகமாக செய்தாலும் ஆபத்து தான், பண்ணாமலே இருப்பதும் ஆபத்து தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவருடத்துக்கு எத்தனை தடவை செக்ஸ் செய்தால் ஆரோக்கியமாக வாழமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருமணத்துக்கு பின் குறைவு:
திருமணத்துக்கு பின் இயல்பாகவே செக்ஸ் ஆர்வம் ஆண், பெண் இருவரிடமுமே குறைவு சகஜம் தான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரத்துக்கு ஒரு முறை:
ஆராய்ச்சியில் வாரத்துக்கு ஒரு முறை செக்ஸில் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக வாழமுடியும் என தெரிவிக்கிறது. ஆனால் இது மனதுக்கு போதிய மகிழ்ச்சியை அளிப்பதில்லை என அனுபவவித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சக்கரையை கட்டுப்படுத்தும்:
சீரான இடைவேளையில் செக்ஸ் வைத்துக்கொள்வது உடலின் சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அளவே இல்லை:
துணையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு கட்டுபாடுகள் இல்லை என சிறந்த தம்பதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சில தம்பதிகள் இது குறைவு, அல்லது அதிகம் என தங்களுக்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்கின்றனர்.
15 சதவீதம் பேர்:
கடந்த 2009ன் ஆய்வின் படி சுமார் 15 சதவீதம் தம்பதிகள் 6 மாதத்திற்கும் மேலாக செக்ஸில் ஈடுபடாமலே இருப்பதாக தெரியவந்தது. அதேநேரம் 34 சதவீதம் பேர் வாரத்துக்கு 2 அல்லது 3 முறை செக்ஸில் ஈடுபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
அதிகமான ஆபத்தா?
திருமணமான தம்பதிகள் தங்கள் துணையுடன் அதிகளவில் செக்ஸில் ஈடுபடலாம் என்றும் இதனால் எந்தவித்திலும் பாதிப்பு இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிவந்துள்ளது.
எத்தனை முறை:
சரியான உடல் ஆரோக்கியத்துடன் வாழ 18 முதல் 29 வயதிலானவர்கள் குறைந்தது வாரத்துக்கு இரண்டு முறையும், வருடத்துக்கு 112 முறையும் செக்ஸில் ஈடுபட வேண்டும். அதேபோல 40 முதல் 49 வயதிலானவர்கள் வருடத்துக்கு 69 முறை செக்ஸில் ஈடுபடுவது சிறப்பானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.