கடந்த சில நாட்களாக முழுவதும் தொடர்ந்து வருகிற குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கிறதுதானே உங்களுக்கும்!. நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்துக் குழந்தைகளின் மீதும் சாதி ,மத பேதமின்றி வெவ்வேறு காரணங்களுக்காகக் கட்டவிழ்த்து விடப்படும் அனைத்து துன்புறுத்தல்களையும் பெற்றோர் மட்டுமே கவனமாக இருந்து காக்க முடியாது.
பாலியல் துன்புறுத்தல்கள்
இந்த அருவருப்பான மற்றும் கொடுமையான குற்றத்தை, குற்றவாளிகள் எவ்வளவு எளிதாகச் செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மூன்றாம் நபரின்(தாயைத் தவிர்த்து) நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைக் கற்பித்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உங்களின் குழந்தைகளுக்கு பாலியில் ரீதியான தொந்தரவு தரும் தொடுதல் பற்றி நீங்களே தெளிவுபடுத்துவதற்கு சற்று கூச்சமாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளைப் பற்றி தெரியப்படுத்துவதே அவர்களின் நிகழ்காலத்திற்கும் மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்கும் நல்லது
கற்றுக்கொடுத்தல் அவர்களுக்கு நீங்கள் இதைப்பற்றிய தெளிவான மனநிலையை உருவாக்கி விட்டால் , உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அறிந்து மனநிம்மதியுடன் இருக்க முடியும். தெளிவு ஏற்பட்ட பிறகு , அத்தகைய சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பதை உங்கள் பிள்ளைகள் நன்றாக அறிந்திருப்பர். இது பற்றிய திறந்த, முதிர்ந்த மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களை கூச்சமின்றி எப்போதும் மேற்கொண்டுவாருங்கள் . அவர்கள் வளர்ச்சிக்கேற்ப விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுத்துங்கள். அவர்கள் உங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் எளிதில் உங்களை அனுகி விஷயங்களை ஒளிவின்றிப் பேசும் தெளிவான மனநிலையை ஏற்படுத்துங்கள்.
ஆரம்ப வயதில் தொடங்குங்கள் குழந்தைகள், நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில் (2-3 வயது ) தொடுதல் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி நீங்கள் கற்பிக்கத் தொடங்கலாம்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள உங்கள் பிள்ளை மிகவும் இளமையாக இருப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகள் தங்களின் உடலின் சில பகுதிகள் அந்தரங்கமானது என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்கிறார்கள்
சேஃப் ஜோன்ஸ் முதலில், உள்ளாடைகளால் மூடப்பட்டுள்ள உடலின் பாகங்களை யாரும் தொடக்கூடாது என்பதைப் புரிய வையுங்கள். அதாவது பெற்றோரின் முன்னிலையில் ஒரு மருத்துவர் பரிசோதனை செய்கையில் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளை குளிப்பாட்டும் நேரம் மட்டுமே விதிவிலக்கு. இதை மீறி யாராவது அவர்களின் அந்தரங்க பாகங்களைத் தொட்டால், அவர்கள் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கும்படி அறிவுறுத்துங்கள்.
அவர்களுக்குள்ளே செல்லுங்கள் முதன்முதலில் அதைப் பற்றி குழந்தைகளிடம் பேசும்போது புரியும்படி, அவர்கள் பதட்டமடையாதபடி மிக எளிதாகச் சொல்லுங்கள் . அவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்கையில் அல்லது அவர்களது விளையாட்டின் இடைப்பட்ட ஓய்வின் போது அவர்களிடம் இதைப் பற்றி பேசுங்கள். அந்த உரையாடலை மிகவும் தீவிரமாக்காதீர்கள். அதனால் குழந்தைகளின் கவனம் சிதற வாய்ப்புண்டு.
உண்மைகளைக் கூறுங்கள் நீங்கள் எப்பொழுதும் அவர்களுள் எளிதாகச் செல்ல வேண்டும், அவர்கள் கூறும் தகவலைப் பற்றியே திரும்பத் திரும்ப விவாதித்து அவர்களை பயமுறுத்தக் கூடாது . அவர்கள் வளரும் போது வளர்ச்சிக்கேற்ற விழிப்புணர்வை படிப்படியாக நீங்கள் அதிகரிக்க வேண்டும். நீங்கள் முதலில் மனித உடலின் பாகங்களைப் பற்றி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாட புத்தகத்தை அதற்காக பயன்படுத்தலாம். பாலியல் அடிப்படை அறிவை , குழந்தைகளுக்கு பயமேற்படுத்தாதவாறு சொல்லிப் புரியவைக்கலாம். இறுதியாக கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் நீங்கள் அவர்களிடம் சொல்லலாம்.
வயதுக்கேற்ற தகவல் குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகள் இரண்டு வயதை அடையும் பொழுது கற்பிக்க வேண்டும். அவர்கள் 4 வயதை அடைவதற்குள் , நடந்த அல்லது நடக்கிற அசம்பாவித சம்பவங்களை விவரிக்கத் தேவையான சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் .பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, இதைப் புரிய வைத்து அனுப்புவதே இதன் முக்கிய நோக்கம். அப்பொழுதுதான் , ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை உங்கள் குழந்தைகள் அடையும் வாய்ப்பு உருவாகிறது.
“நோ சொல்லப் பழக்குங்கள்” வயதிற்கேற்ற பாசம் காட்டும் பழக்கத்தை அவர்களுக்கு சிறுவயதிலேயே சொல்லிக்கொடுங்கள். குழந்தைகள் உங்கள் நண்பரையோ அல்லது உறவினரையோ பார்க்கும் பொழுது கட்டிபிடிக்கவோ அல்லது முத்தமிடவோ பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுவது நல்லது. யாராவது தங்கள் மடியில் உட்கார கேட்கையில் , அவர்கள் “வேண்டாம்” என்று தைரியமாகச் சொல்ல பழக்கவேண்டும். இந்த மாதிரி “நோ ” சொல்லிப் பழகும் பொழுது இதைப்பற்றி இன்னும் ஆழமான புரிதல் அவர்களுக்கு வரும். எனவே பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்கத்தேவையான வழிமுறைகளை அறிதல் மற்றும் தேவையான புரிதலைக் கொண்டிருக்க வேண்டிய கடமை/பொறுப்பு உங்களுடையது என்பதை மறவாதீர்கள் படித்த பிறகு இந்த நல்ல மற்றும் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான செய்தியை அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.