Home பெண்கள் அழகு குறிப்பு தேவசேனா போல அழகிய சருமம் பெற சில குறிப்புகள்

தேவசேனா போல அழகிய சருமம் பெற சில குறிப்புகள்

44

இளமைப் பருவத்தில்தான் சருமப் பிரச்சனைகள் அதிகளவில் ஏற்பட ஆரம்பிக்கும். இளமைப் பருவத்தில் உண்டாகக்கூடிய சருமப் பிரச்சனைகளில் சில: பருக்கள், கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவை. இளமைப் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சருமத்தின் வகை, பின்பற்றப்படும் சருமப் பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது.

ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை சமாளிக்க, சரியான நேரத்தில் முறையான சருமப் பராமரிப்பு முறைகளை மேற்கொள்வது எப்போதும் சிறந்தது. சருமப் பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யவில்லையெனில், இளம் வயதில் சுய மதிப்பு குறைவதற்கு அதுவே காரணமாகிவிடும். சரியான தயாரிப்புகள் (சருமத்தின் வகைக்கு ஏற்ப), சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தி முறையான சருமப் பராமரிப்பு முறைகளை தொடங்குவது குறித்து, பெரியவர்கள் இளம் பருவத்தினருக்கு வழிகாட்ட வேண்டும். இளம் பருவத்தினர் அந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றுகிறார்களா என்பதைப் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

சருமத்தின் வகைகள் (Skin Types)

சருமப் பராமரிப்பு முறைகளைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் சருமத்தின் வகையை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்:

இயல்பான சருமம்: இந்த வகை சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த வகை சருமத்தில் எண்ணெய் மற்றும் நீரின் அளவு சமநிலையில் இருக்கும். இதனால் சருமம் அதிகம் எண்ணெய்ப்பிசுப்புடனும் இருக்காது, அதே சமயம் உலர்வாகவும் இருக்காது. இந்த வகை சருமம் எந்தவித கறைகளும், பருக்களும் அற்று மென்மையாகவும், நிறம் சீராகவும் இருக்கும். இந்த வகை சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற, லேசான க்ளென்சர்களைப் பயன்படுத்தி முகத்தை 2-3 முறை கழுவினாலே போதும்.
வறண்ட சருமம்: இந்த வகை சருமம் சொரசொரப்பாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கும். உள் மற்றும் வெளிப்புறக் காரணிகள் போன்ற பல காரணிகளால் இது ஏற்படுகிறது. இந்த வகை சருமங்களுக்கு சோப் மற்றும் பிற க்ளென்சிங் ஏஜென்ட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில் அவை சருமத்தை மேலும் வறண்டுபோகச் செய்யும். வறண்ட சருமத்திற்கு தினமும் லேசான க்ளென்சரைப் பயன்படுத்தி முகம் கழுவி, மாய்ஸ்டுரைசர் போடுவது நல்லது. அடிக்கடி வெந்நீரில் குளிக்கக்கூடாது, மேலும் அதிக சூடு சருமத்திற்கு ஏற்றதல்ல ஆகவே அதிக வெப்பம் சருமத்தைப் பாதிக்கும்படியும் விடக்கூடாது.
எண்ணெய்ப்பிசுப்புடைய சருமம்: எண்ணெய்ப்பிசுப்புள்ள சருமம் மினுமினுவென்று இருக்கும். எண்ணெய்ப்பிசுப்புள்ள சருமம் கொண்ட இளம் பருவத்தினருக்கு பருக்கள், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் இருக்கும். சோப்பு மற்றும் நீரைப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவுதலும், வழக்கமாக க்ளென்சிங்கைப் பின்பற்றுதலும் எண்ணெய்ப்பிசுப்புள்ள சருமத்திற்கு மிகவும் முக்கியம். காஸ்மெட்டிக்ஸ் மற்றும் பிற ஃபேசியல் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கலப்பு சருமம்: இந்த வகை சருமத்தில் T-சோன் (நெற்றி, மூக்கு, தாடை) எண்ணெய்ப்பிசுப்புடனும், மற்ற இடம் வறண்டும் இருக்கும். இந்த வகை சருமத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. முகத்தில் உள்ள எண்ணெய்ப்பிசுப்பை அகற்ற, லேசான க்ளென்சர் மற்றும் நீரைப் பயன்படுத்தி தினமும் 2-3 முறை முகம் கழுவினால் போதும். வறண்டுள்ள பகுதிகளில் மட்டும் மாய்ஸ்டுரைசரைப் பயன்படுத்த வேண்டும், எண்ணெய்ப்பிசுப்புள்ள பகுதிகளில் பயன்படுத்தத் தேவையில்லை.
ஆரோக்கியமான சருமத்திற்கான உதவிக்குறிப்புகள் (Tips for Healthy Skin)

உங்கள் சருமத்தின் வகையை அடையாளம் கண்டதும், சருமப் பராமரிப்பு முறைகளைத் தொடங்கலாம். அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற இது உதவும்.

கழுவுதல், க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்டுரைசிங் ஆகியவை சருமப் பராமரிப்பின் முக்கியப் பகுதிகளாகும்: இதுவும் சரும வகையைப் பொறுத்தது.
இளம் பருவத்தினருக்கு மிகவும் பொதுவான பிரச்சனை பருக்கள். பருக்களைப் போக்க வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தவும். ஆனால் கடுமையான பருக்கள் எனில், சரும நிபுணரை ஆலோசனை செய்வது சிறந்தது. முகப்பருக்கள் அல்லது கறைகளை கைகளால் தொடவோ, பிடுங்கவோ வேண்டாம். அப்படிச் செய்தால் அது மேலும் தீங்கை விளைவித்து, வடுக்களை உண்டாக்கிவிடும்.
இளம் வயதில் சருமம் மென்மையாகவும், சென்சிட்டிவாகவும் இருக்கும் என்பதால் அதிக மேக்கப்பைத் தவிர்க்கவும். அதிக மேக்கப் போடுவது சருமத்தை எளிதில் சேதமாக்கிவிடும். மேக்கப் செய்துகொண்டால், இரவு தூங்குவதற்கு முன்பு நல்ல க்ளென்சரைப் பயன்படுத்தி மேக்கப்பை அகற்றிவிட வேண்டும். ஏனெனில் மேக்கப் பொருள்கள் சருமத்தில் உள்ள நுண்துளைகளை அடைத்து, முகப்பரு போன்ற பிற சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சென்சிட்டிவான சருமம் எனில், காஸ்மெட்டிக்ஸ்களை வாங்குவதற்கு முன்பு சரும நிபுணரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
வெயிலால் சருமம் கருப்பது, சருமத்தை மட்டும் சேதப்படுத்தாமல், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கிரீனில் சூரிய பாதுகாப்புக் காரணி (SPF) 30 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது சருமத்தை ஹைட்ரேட் செய்து, மாய்ஸ்டுரைஸ் செய்ய வேண்டும். எண்ணெய்ப்பிசுப்புள்ள சருமத்தைப் பொறுத்தவரை, மாய்ஸ்டுரைசரைத் தேர்ந்தெடுக்கும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அது ஹைட்ரேட்டிங் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் எண்ணெய்ப்பிசுப்பு இல்லாமலும் இருக்க வேண்டும்.
தேன், வெள்ளரிக்காய், கடலை மாவு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள். அதைத் தொடர்ந்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற வாரத்திற்கு ஒரு முறை ஸ்க்ரப் செய்யுங்கள்.
மென்மையான, ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தைப் பெறுவதற்கு சமச்சீரான உணவு மற்றும் போதுமான நீர் (நாளுக்கு 8-10 டம்ளர் நீர்) உட்கொள்ளல் மிகவும் அவசியம்.
முறையான தூக்கம் மற்றும் நல்ல உடற்பயிற்சி, இளமையான அழகான தோற்றம் பெற உதவுகிறது.
எளிமையான ஆனால் பயனுள்ள சருமப் பராமரிப்பு முறைகளை ஆரம்பத்திலேயே பின்பற்றத் தொடங்குதல், இளம் பருவத்தினருக்கு பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மட்டுமின்றி, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகையைக் கொண்டுவரவும் உதவுகிறது.