Home பெண்கள் அழகு குறிப்பு அக்குள், கழுத்து, கை, மார்பு பகுதியில் உள்ள மருக்களை உடனே நீக்கும் வீட்டு வைத்தியம்..!

அக்குள், கழுத்து, கை, மார்பு பகுதியில் உள்ள மருக்களை உடனே நீக்கும் வீட்டு வைத்தியம்..!

45

சருமத்தில் ஏற்படும் மருக்களால் பலரின் சரும அழகு குறைந்து விடுகிறது. இரத்த நரம்புகள் மற்றும் கொலாஜன் சேர்வதனாலும் தோல் பகுதி கடினமாகி இந்த மருக்கள் தோன்றுகின்றன.

இவை அக்குள், கழுத்து, கை, கண் இமை, மார்பகத்தின் கீழ் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றை வீட்டு வைத்தியத்தில் இலகுவாக குணப்படுத்தலாம்.

மருக்களை உடனே நீக்கும் வீட்டு வைத்தியம்.

1. வாழைப்பழத் தோல்.

இரவு நேரங்களில் வாழைப்பழத் தோலின் உட் பகுதியை எடுத்து மருக்கள் மீது வைத்து துணியினால் மூடிக் கட்டவும்.

மறு நாள் காலையில் துணியை அகற்றவும். மருக்கள் முற்றாக நீங்கும் வரை இதை செய்வது சிறப்பானது.

2. டக் டேப்(Duct tape).

தினமும் மருக்கள் மேல் Duct tape சிறு துண்டை ஒட்டவும். தொடர்ச்சியாக 12 நாட்கள் செய்வதனால் மருக்களை அகற்றி பொலிவான சருமத்தைப் பெறுவீர்கள்.

3. தேயிலை மர எண்ணெய்.

நீரினால் நனைந்த பஞ்சின் மீது 3 துளி தேயிலை மர எண்ணெய் சேர்த்து மருக்கள் மேல் தேய்க்கவும். தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு செய்வதனால் மருக்களை அகற்ற முடியும்.

4. ஆப்பிள் சிடர் விநாகிரி.

பஞ்சினால் ஆப்பிள் சிடர் விநாகிரியை மருக்கள் மீது நேரடியாக ஒரு மாதத்திற்கு தடவி வருவதனால் மருக்கள் முற்றாக நீங்கும்.

5. அன்னாசிப் பழச் சாறு.

அன்னாசிப் பழச் சாற்றை எடுத்து ஒரு நாளில் பல தடவைகள் மருக்கள் மீது தடவவும். பழச் சாற்றை தடவிய பின்பு சருமத்தை கழுவ வேண்டிய தேவையில்லை.

தொடர்ந்து 10 நாட்கள் இவ்வாறு செய்வதனால் மருக்கள் மறைந்து விடும்.

6. வெங்காயச் சாறு.

ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை வெட்டி அதில் உப்பை சேர்த்து இரவு முழுவது ஊற விடவும்.

மறு நாள் காலை அதனை சாறாக பிழிந்து எடுத்து மருக்கள் மீது தடவி வரவும். 10-12 நாட்கள் செய்து வருவதனால் மருக்கள் முற்றாக நீங்கும்.

7. ஆமணக்கு எண்ணெய்.

ஆமணக்கு எண்ணெய்யுடன் சமையல் சோடாவைச் சேர்த்து பசை போன்று தயாரிக்கவும். இந்தப் பசையை 2 முதல் 4 வாரங்கள் பூசி வருவதனால் மருக்கள் முற்றாக நீங்கும்.

இந்த இலகுவான இயற்கை முறைகள் மூலம் வீட்டிலேயே மருக்களை நீக்கி பொலிவான சருமத்தைப் பெற முடியும்.