பாலியல் செயல்களில் மிகவும் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்வழிப் புணர்ச்சி என்பது ஒரு பொதுவான பழக்கமாகும். வாய்வழிப் புணர்ச்சி என்பது (வாய், உதடுகள் அல்லது நாக்கைப் பயன்படுத்தி) ஆண்குறி (ஆணுறுப்பை வாயால் தூண்டுதல்), யோனி (பெண்ணுறுப்பை வாயால் தூண்டுதல்) அல்லது ஆசனவாய் (ஆசனவாயை வாயால் தூண்டுதல்) ஆகியவற்றில் வாய்வழி கிளர்ச்சியூட்டுதல் அல்லது பெறுதல் ஆகும்.
பால்வினை தொற்றுகள் (STI) பிறப்புறுப்பு பகுதியிலிருந்து வாய்க்கும் மற்றும் வாயிலிருந்து பிறப்புறுப்பு பகுதிக்கும் பரவக்கூடும். வாய்வழிப் புணர்ச்சியால் பரவக்கூடிய பால்வினை தொற்றுகளின் ஆபத்தானது இயல்பான அல்லது குதவழிப் புணர்ச்சியால் பரவக்கூடிய பால்வினை தொற்றுகளின் ஆபத்தைவிட குறைவு என்றாலும், ஆபத்துகள் இருக்கிறது. பரவலானது உடல் திரவங்கள் மூலம் அல்லது தோலில் திறந்த பகுதிகள் வழியாக நேரடியாகவும் பரவலாம். வாயில் வெட்டுகள் அல்லது புண்கள் இருந்தால் வாய்வழிப் புணர்ச்சியால் பரவும் பால்வினை தொற்றுகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
வாய்வழிப் புணர்ச்சியால் பரவக்கூடிய சில பால்வினை தொற்றுகள் உள்ளன. பொதுவாக பரவும் தொற்றுகள்:
கொனோரியா
சிவிலிசு நோய்
சிற்றக்கி
குறைவாக பரவும் தொற்றுகள்:
எச். ஐ. வி (HIV)
கிளமீடியா
ஹெப்படைடிஸ் A, ஹெப்படைடிஸ் B, ஹெப்படைடிஸ் C
பிறப்புறுப்பு மருக்கள்
தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை (Symptoms and Treatment of Infection)
கிளமீடியா மற்றும் கொனேரியா – தொண்டை, பிறப்புறுப்பு பகுதிகள், சிறுநீர்க் குழாய் மற்றும் மலக்குடல் ஆகியவை பொதுவாக பாதிக்கப்படுகின்றன. வழக்கமாக, எந்த அறிகுறிகளும் இல்லை, ஆனால் தொண்டைப்புண், பிறப்புறுப்புகளிலிருந்து திரவம் வெளியேறும்போது வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை ஏற்படலாம். நோய்த்தொற்று கட்டுப்படுத்தியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.
சிவிலிசு நோய் – வாய், உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு பகுதிகள், சிறுநீர்க் குழாய் மற்றும் மலக்குடல் ஆகியவை பொதுவாக பாதிக்கப்படுகின்றன. நோயின் ஆரம்பநிலையில் வாய், தொண்டை, பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புண்கள் உண்டாகலாம். இரண்டாவது நிலையில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடிப்புகள் ஏற்படலாம். நோய்த்தொற்று கட்டுப்படுத்தி இந்த அறிகுறிகளை குணமாக்கும்.
HSV (1 மற்றும் 2) – வாய், உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு பகுதிகள், சிறுநீர்க் குழாய், மலக்குடல் மற்றும் பிட்டப்பகுதி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. வாய், உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு பகுதிகள் மற்றும் பிட்டப்பகுதியில் கொப்புளங்கள் உண்டாகலாம். மருந்துகளைப் பயன்படுத்தி காயங்களை குறைக்கலாம் அல்லது வராமல் தடுக்கலாம்.
பிறப்புறுப்பு மருக்கள் (HPV) – பிறப்புறுப்பு பகுதிகள், ஆசனவாய் மற்றும் மலக்குடல் ஆகியவை பொதுவாக பாதிக்கப்படுகின்றன. மேற்கூறிய பகுதிகளில் மருக்கள் உண்டாகலாம், மேலும் இது புற்றுநோயாக மாறக்கூடும். பிறப்புறுப்பு மருக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படலாம். பேப் ஸ்மியரில் அசாதாரண செல்கள் இருந்தால், சிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.
HIV – வாய், பிறப்புறுப்பு பகுதிகள், ஆசனவாய் மற்றும் மலக்குடல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே வெளிப்படும். பின்னர் உயிர்க்கொல்லி நோயாக (எய்ட்ஸ்) மாறிவிடும். எச். ஐ. வி/எய்ட்ஸ் நோய்களுக்கு எந்த மருந்தும் இல்லை. ஆனால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை வழங்கப்படும்.
வாய்வழிப் புணர்ச்சி மூலம் பரவும் பால்வினை நோய்த்தொற்றுகளின் பரவலைத் தடுத்தல் (Preventing STIs spread through oral sex)
வாய்வழி செக்ஸ் இருந்து பால்வினை பரவுவதை தடுக்க மிகவும் பயனுள்ள வழியில் அது விலகியிருப்பதாக அல்லது யார் பால்வினை எதிர்மறை சோதனை ஒரு பங்குதாரர் ஒரு பரஸ்பரம் தாரம் உறவு இருக்க வேண்டும். அவர்கள் எந்த தெளிவான அறிகுறிகள் இருக்கும் பல பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலையை அறிந்து இருக்கலாம் ஏனெனில் சோதனை அவசியம்.
நீங்கள் அல்லது உங்கள் துணைவர் பால்வினை நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் இருந்தாலோ அல்லது வெடிப்பு (அக்கி வெடிப்புகள் போன்ற) அறிகுறிகளுக்கான சிகிச்சையில் இருந்தாலோ, வாய்வழிப் புணர்ச்சியை செய்யக்கூடாது.
துணைவரின் வாய் மற்றும் மற்றொரு துணைவரின் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் ஆகியவற்றிற்கு இடையேயான நேரடித் தொடர்பை தடுப்பதற்கான முறையைப் பயன்படுத்துவதன் மூலம், வாய்வழிப் புணர்ச்சியின்போது பரவும் பால்வினை நோய்த்தொற்று பரவுவதை குறைக்கலாம்.
வாய்வழிப் புணர்ச்சியால் பரவும் பால்வினை நோய்த்தொற்றின் ஆபத்தைக் குறைப்பதற்கான வழிகள்:
ஃபெல்லாட்டியோ (வாயால் ஆணுறுப்பைத் தூண்டுதல்) (Fellatio (mouth-to-penis contact)
வழவழப்பு பொருள் சேர்க்கப்படாத லேட்டக்ஸ் ஆணுறையைப் பயன்படுத்தலாம்
உங்கள் துணைவருக்கு லேட்டக்ஸால் ஒவ்வாமை எனில், பிளாஸ்டிக் (பாலியூரிதீன்) ஆணுறைகளை பயன்படுத்தலாம்
விந்து வாய்க்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும்
கனிலிங்கஸ் (பெண்ணுறுப்பை வாயால் தூண்டுதல்)
வாய்வழிப் புணர்ச்சியின்போது பெண்ணுறுப்பை மூடுவதற்கு பல் அணையைப் (15 செ. மீ X 15 செ. மீ அளவுள்ள லேட்டக்ஸ் அல்லது பாலியூரிதின்) பயன்படுத்தவும்.
மாற்றாக, ஆணுறையை சதுர வடிவில் வெட்டி யோனி மற்றும் வாய்க்கு நடுவில் வைத்துக்கொள்ளலாம்.
அனிலிங்கஸ் (ஆசனவாயை வாயால் தூண்டுதல்) (Cunnilingus (mouth-to-vagina contact))
பல் அணையை பயன்படுத்தவும்
மாற்றாக, ஆணுறையை சதுர வடிவில் வெட்டி ஆசனவாய் மற்றும் வாய்க்கு நடுவில் வைக்கவும்.