Home பெண்கள் அழகு குறிப்பு செபேசியஸ் நீர்க்கட்டிகளை வீட்டிலேயே இயற்கையாக நீக்குவது எப்படி..?

செபேசியஸ் நீர்க்கட்டிகளை வீட்டிலேயே இயற்கையாக நீக்குவது எப்படி..?

40

செபேசியஸ் சுரப்பிகள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள். இவை சருமத்தில் வலிகளை ஏற்படுத்தாத நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றது.

இதனால் சருமத்தின் அழகை இழக்கச் செய்கின்றது.

இவற்றை இலகுவான முறையில் வீட்டிலேயே நீக்க முடியும்.

ஆப்பிள் சிடர் விநாகிரி

ஆப்பிள் சிடர் விநாகிரி சருமத்தின் பல கோளாறுகளை குணப்படுத்தும்.

இதனை கட்டிகலின் மீது நேரடியாக தடவும் போது உள்ளுக்குள் இருக்கும் கழிவு நீர் வெளியேறும்.

அதனால் துணியால் சுற்றி கட்டவும். 3-4 நாட்கள் இவ்வாறு செய்வதனால் கட்டிகளை முழுமையாக நீக்க முடியும்.

கற்றாளை

கற்றாளைச் சாற்றை கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டிகள் உடைந்து அழுக்குகள் வெளியேறுவதுடன் வீக்கம், வலிகள் குறைவடையும்.

அதே வேளை கற்றாளைச் சாற்றை பானாமாக அருந்தி வருவதனால் விரைவான தீர்வைப் பெற முடியும்.

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்யில் வீக்கத்தை குறைப்பதற்கும் , பக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் தன்மையும் உள்ளது.

ஒரு நாளிற்கு 3-4 தடவைகள் கட்டிகள் மீது எண்ணெய்யை பூசி வருவதனால் கட்டிகள் அகன்று விடும்.

மஞ்சள்

மஞ்சள் அதிகளவில் ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன்படுத்துகின்றனர். இது சருமத் தொல்லைகளை நீக்கி மிருதுவாக மாற்றுகின்றது.

மஞ்சளுடன் தேனைக் கலந்து கட்டிகள் மீது பூசி வருவதனால் சில நாட்களில் கட்டிகள் முற்றாக அகன்று விடும்.

தேன்

கோதுமைப் புற்களை நன்றாக அரைத்து அதனுடன் தேனைக் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வருவதனால் கட்டிகள் நீங்கும்