Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் தாய்மை அடைவதற்கான சரியான வயது எது தெரியுமா?

பெண்கள் தாய்மை அடைவதற்கான சரியான வயது எது தெரியுமா?

33

பெண்கள் தாய்மை அடைவதற்கான வயது தொடா்பில் பலா் பல்வேறு பட்ட கருத்துக்களை கூறிவருகிறாா்கள்.

எது எவ்வாறு இருப்பினும் பெரும்பாண்மையாக 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது என்றும் மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம் என்றும் கூறுகின்றாா்கள்.

கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள்.

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்

ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது.

23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம் என்று கூறப்படுகின்றது.