அக்குள் பகுதி கறுப்பாக இருந்தால் அது நோய் அல்ல.
அக்குள் பகுதி கறுப்பாக காணப்படுவதற்கு அப்பகுதியில் முடியை அகற்றுதல், அதற்காகப் பயன்படுத்தும்.
கிரீம் வகைகள், அதிகமாக வியர்த்தல், அக்குள் பகுதிக்கு காற்றோட்டம் இல்லாமை, இறந்த கலங்கள் அப் பகுதிகளில் படிவடைதல், அல்ககோலில் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்களை பயன்படுத்தல் போன்றவை காரணமாகின்றன.
அக்குள் பகுதிகள் கறுப்பாக இருப்பதனால் கைகளற்ற வேறுபட்ட வடிவமைப்பில் உள்ள ஆடை வகைகளை அணிய முடியாத இக்கட்டான நிலை உருவாகின்றது.
உங்கள் கவலைகளை தவிர்த்து பின்வரும் இயற்கையான முறைகளை பின்பற்றுவதனால் உங்கள் பிரச்சினை தீர்க்க முடியும்.
1. எலுமிச்சப்பழம்.
எலுமிச்சைப்பழத்தில் பீளிச் செய்யும் தன்மை உள்ளது. அத்துடன் இதில் உள்ள பக்டீரியா மற்றும் கிருமி நாசினிகளை நீக்கும் தன்மை உள்ளதால் இலகுவாக கருமை நிறத்தை அகற்றவல்லது.
இதில் உள்ள அமிலத்தன்மையால் இறந்த கலங்களை தளரச் செய்து நீக்கி விடுகின்றது.
பயன்படுத்தும் முறை
எலுமிச்சப்பழத்தை பெரிய துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை வட்ட அசைவில் அக்குள் பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும். சிறிது நேரத்தின் பின்பு நீரினால் கழுவவும்,
சிறந்த தீர்வுக்கு தினமும் தூங்குவதற்கு முன்பு இதனை செய்து வரவும்.
2. சமையல் சோடா
இறந்த கலங்கள் படிவதனால் அக்குள் பகுதிகள் அதிகளவில் கறுப்பாக தோற்றமளிக்கின்றது. இதனை சமையல் சோடா இலகுவாக அகற்றி விடுகின்றது.
சமையல் சோடாவை பயன்படுத்துவதனால் கறுப்பு நிறம் நீங்கி விடுகிறது. அத்துடன் உடல் துர்நாற்றத்தையும் நீக்கும் தன்மை சமையல் சோடாவிடம் உள்ளது.
பயன்படுத்தும் முறை
சமையல் சோடாவை நீருடன் கலந்து பசை போன்று தயாரித்துக் கொள்ளவும். இந்த பசையை அக்குள் பகுதிகளில் நன்றாக தேய்த்து, சுத்தமான நீரிக் கழுவவும். இதனை வாரத்தில் 3 முதல் 4 தடவைகள் செய்வதனால் அக்குள் பகுதிகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.
மேலும் சமையல் சோடா மற்றும் சோள மாவினைச் சேர்த்து பவுடராக அக்குள் பகுதிகளில் பூசுவதனால் துர்நாற்றம் நீங்கும்.
3. தோடம்பழத் தோல்.
தோடம்பழத்தில் சருமத்தை தளரச் செய்து வெளிரச் செய்வதற்கான தன்மை உள்ளதால் அக்குள் பகுதிகளின் நிறத்தை இலகுவாக மாற்றக் கூடியது. மேலும் இது இயற்கை வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்தலாம்.
இது இறந்த கலங்களை நீக்குவதன் மூலம் கறுமை நிறத்தை அகற்றுகின்றது.
பயன்படுத்தும் முறை.
தோடம்பழத் தோலை சீவி, சில நாட்களிற்கு வெயிலில் உலர வைக்கவும். நன்றாக உலர்ந்த பின்பு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
தோடம்பழ தோல் பவுடருடன் தேவையான அளவு ரோஜா நீர் (rose water) மற்றும் பால் சேர்த்து பசை போன்று தயாரித்துக் கொள்ளவும்.
இதனை அக்குள் பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் வரை உலர வைத்த பின்பு நீரினால் நன்றாக கழுவி கொள்ளவும். தினமும் தூங்குவதற்கு முன்னர் இதனை செய்வதனால் சிறந்த பலனை பெற முடியும்.