Home ஆரோக்கியம் பெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான...

பெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான பரிசோதனைகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

23

பெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான பரிசோதனைகள் இவை!

1. மார்பக புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் பெண்களை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 40 வயதை கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இதற்கான பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். இந்த பரிசோதனை உணர இயலாத சிறிய கட்டிகளையும் கண்டறிய உதவும்.

2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். நோய் பாதிப்பினை கண்டறிதல் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல் போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய அங்கம். கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கு நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 30 முதல் 65 வயதிற்குட்பட்ட பெண்கள் 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

3. ரத்த அழுத்த பரிசோதனை

பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொருவருடைய இதயத் துடிப்பை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடும். உடற்பயிற்சி செய்யும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தூங்கும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும் போதும் ரத்த அழுத்தம் மாறுபடும். உயர் ரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம். ரத்த அழுத்தத்திற்குப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம், மயக்கம் அடைதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

4. கொழுப்பு பரிசோதனை

45 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இது நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை அளவீடு செய்ய உதவும். கொழுப்பு அளவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. கொழுப்பு அளவை சீராக வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய பெண்கள் கொழுப்பு அளவுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

5. ரத்தக் குளுக்கோஸ் சோதனை

பருமனான உடல்வாகு கொண்ட 40 முதல் 70 வயதிற்குட்பட்ட பெண்கள் ரத்தக் குளுக்கோஸ் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட்டுவிடும்.