Home அந்தரங்கம் செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…

செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…

62

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனைதான் ..

தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.

தம், தண்ணிக்கு நோ

புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்

திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

எளிதான பொசிஷனையே தொடருங்க

நமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை நோ

ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சத்தான உணவே உற்சாக உறவு

நாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்துள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கலாம்.,