சிலர் மெலிந்த தேகத்தை கொண்டவர்களாக இருந்தாலும், பின்புறத்தில் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
தோப்புக்கரணம் இடுவதன் மூலம் உடம்பின் பின்புறத்தில் உள்ள கொழுப்பு குறைவடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தோப்புக்கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுப்பெறும். கீழே உள்ள இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் விரைவில் பின்புறத்தில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.
எவ்வாறு தோப்புக்கரணம் போடுவது?
இந்த பயிற்சியை செய்ய முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும். முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானைபோல்) நிற்க வேண்டும். தலை தரையைப் பார்த்த படி இருக்கட்டும்.
இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல் நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர், இதைப் போல் இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும். இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.
பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பின்பக்கம் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்திலிருந்தே படிப்படியாக வித்தியாசம் ஏற்படுவதை அவதானிக்கலாம்.