Home பெண்கள் அழகு குறிப்பு உதடுகளில் லிப்ஸ்டிக் வழியாமல் இருக்க இதை மட்டும் பண்ணுங்க… நாள் முழுவதும் அசத்தலாம்!

உதடுகளில் லிப்ஸ்டிக் வழியாமல் இருக்க இதை மட்டும் பண்ணுங்க… நாள் முழுவதும் அசத்தலாம்!

32

தன்னை அழகு படுத்திக்கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும், குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் அதிகம் மெனக்கெடுவார்கள்.

நாம் என்னதான் நேரத்தை செலவு செய்து கொள்ளப்படும் மேக்கப்புகள் அதிக நேரம் இருக்கின்றனவா என்பது சந்தேகமே.

நாம் போடும் லிப்ஸ்டிக் தண்ணீர் குடித்தாலோ, சாப்பிட்டாலோ உடனே மறைந்துவிடும். நீண்ட நேரம் இதனை எப்படி பாதுகாக்கலாம் என இங்கே பாருங்கள்.

உதட்டை ஈரபதத்துடன் வையுங்கள்
உதட்டில் உள்ள இறந்த செல்களைப் போக்கி, உதட்டை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள். இதனால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் தங்கும். உதட்டை எக்ஸ்போலியெட் செய்ததற்குப் பிறகு லிப் பாம் பயன்படுத்தி மாயச்ச்சரைஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உதடுகள் மென்மையாக இருக்கும். ஆரோக்கியமான உதடுகளில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

லிப் லைனர்
லிப் லைனர் பயன்படுத்துவதால் உதட்டில் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்கும். லிப் லைனரில் இருக்கும் மெழுகுத்தன்மை, உதடுகளில் லிப்ஸ்டிக்கை ஒட்டிக் கொள்ளச் செய்யும்.

உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக், உதட்டில் இருந்து வெளியேறாமல் தடுக்க இந்த லிப் லைனர் பயன்படுகிறது.

பொதுவான லிப் லைனர் அல்லது லிப்ஸ்டிக் நிறத்திற்குப் பொருத்தமான நிற லிப் லைனர் பயன்படுத்தலாம். லிப் லைனர் உதடுகளுக்கு அழகான வடிவத்தையும் தர உதவுகிறது.

லிப் ப்ரைமர்
உதட்டின் நிறத்திற்கு ஒரு பவுண்டேஷனை இந்த ப்ரைமர் தருவதால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் தங்குகிறது.

லிப்ஸ்டிக் பயன்படுத்த தேவையான ஒரு மிருதுவான லேயரை இந்த ப்ரைமர் தருகிறது.

மேலும் லிப்ஸ்டிக் கரைந்து வெளிவராமல் இருக்கவும் பயன்படுகிறது. லிப் ப்ரைமரில் இருக்கும் சில கூறுகள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

ஈரத்தை உறிஞ்சுவது
உதடுகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவது என்பது எளிமையான காரியம் தான். ஆனால் அதனை கச்சிதமாக செய்ய வேண்டும். ஈரத்தை உறிஞ்சி எடுப்பதால், உதட்டில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப்பசை குறைகிறது.

மேலும் உதட்டில் இருந்து லிப்ஸ்டிக் வழிந்து வருவது குறைக்கப்படுகிறது. முதலில் ஒரு மெல்லிய லேயர் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவவும்.

பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உதட்டில் ஒத்தி எடுக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உதட்டில் அடுத்த லேயர் லிப்ஸ்டிக்கை தடவவும்.

பவுடர்
உங்களுக்குப் பிடித்த லிப் கலரைப் பயன்படுத்தியவுடன், டிஷ்யூ பேப்பரை எடுத்து உதட்டில் வைக்கவும். பிறகு ஒரு பிரஷில் ட்ரான்ஸ் லுசென்ட் பவுடரை டிஷ்யூ பேப்பர் மேல் தடவவும். பிறகு டிஷ்யூ பேப்பரை எடுத்துவிட்டு மேலும் ஒரு லேயர் லிப் கலரை பயன்படுத்தவும்.

பவுண்டேஷன்
பவுண்டேஷனும் லிப் ப்ரைமர் போல் வேலை செய்யும். உதட்டின் மென்மையை அதிகப்படுத்தி, லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் தங்க இது உதவுகிறது. பவுண்டேஷனை உதட்டில் தடவ விரல் நுனி அல்லது தட்டையான பிரஷ் பயன்படுத்தலாம். பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்தும்போது பிரஷ் மட்டும் பயன்படுத்துவது நல்லது.

லிப்ஸ்டிக் பார்முலா
சரியான லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீண்ட நேரம் தங்கக்கூடிய லிப்ஸ்டிக்கில் குறைந்த மாயச்ச்சரைஸர் மற்றும் அதிக நிறமி இருப்பதால், அதிக நேரம் இவை உதடுகளில் தங்க நேரிடுகிறது.

ஆகவே வாட்டர் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை வாங்கிப் பயன்படுத்தலாம். க்லோசி அல்லது ஒளி புகாத லிப்ஸ்டிக் மிக குறைந்த நேரமே தங்குகிறது.

சரியான முறையில் பயன்படுத்துவது
சரியான வடிவில் உதடுகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக் தடவலாம். லிப் கலர் பயன்படுத்தும்போது உதட்டின் ஒரு மூலையில் இருந்து மிகவும் கவனமாக நடுப்பகுதி வரை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஒரு சரியான ஃபினிஷ் கிடைக்கும்.

லிப்ஸ்டிக் கரைந்து வெளிவராமல் இருக்க
உதடுகளில் இருந்து லிப்ஸ்டிக் வழியாமல் இருக்க சில எளிய வழிமுறைகள் உள்ளது. கன்சீலர் பென் அல்லது புருவ ஜெல் பயன்படுத்தி உதட்டில் கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். இவை லிப்ஸ்டிக்கிற்கு ஒரு பாதுகாப்பாக இருந்து வெளியில் வழியாமல் காக்கும்.