“காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக நாயகன் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். |
கொலிவுட்டில் சித்தார்த், அமலா பால் இருவரும் இணைந்து காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
Y NOT STUDIOS காதலில் சொதப்புவது எப்படி படத்தை தயாரித்துள்ளது. சித்தார்த், நிரவ்ஷா ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்கள். இந்நிலையில் காதலில் சொதப்புவது எப்படி படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. இது குறித்து சித்தார்த் தனது டிவிட்டரில், காதலில் சொதப்புவது எப்படி படத்தின் இந்தி உரிமைக்காக கேட்டு வருகிறார்கள். விரைவில் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்படும். Y NOT மற்றும் எனது நிறுவனமான EKATI இப்படத்தினை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்திற்காக நிரவ் ஷாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. DIGITAL CAMERA மூலம் இப்படத்தினை 35 நாட்களில் முடித்து கொடுத்து இருக்கிறார் |