Home பெண்கள் தாய்மை நலம் கருமுதல் குழந்தைவரை: கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்றை தவிர்ப்பது எப்படி?

கருமுதல் குழந்தைவரை: கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்றை தவிர்ப்பது எப்படி?

32

நான் கர்ப்பம் தரித்திருக்கிறேன். எனக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதை எப்படித் தவிர்ப்பது?

கர்ப்பக் காலத்தில் தொடக்கத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதை சகித்துக்கொள்ளலாம். இரவில் அதிகமாக எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மாலை நேரத்தில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளைக் குறைவாக அருந்துங்கள்.

சிறுநீர் கழிக்கும்போது, கழிவறையில் முன்னும் பின்னும் அசைந்தபடி சிறுநீர் கழிப்பது பலன் தருவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இவ்வாறு முன்னும் பின்னும் நகர்ந்தபடி சிறுநீர் கழிப்பதால் கருப்பையானது சிறுநீர்ப் பையின் மீது அழுத்தம் ஏற்படுத்துவது குறைகிறது. தவிர, நீங்கள் சிறுநீர்ப் பையில் இருந்து முற்றிலுமாக சிறுநீரை வெளியேற்றி விடலாம்.

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது ரத்தம் வெளியேறினால், சிறுநீர்த் தாரையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம். கருக்காலத்தில் இத்தகைய தொற்று ஏற்படுவது இயல்பு. இதைப்பற்றி உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.