Home பெண்கள் அழகு குறிப்பு சுண்டியிழுக்கும் உதடுகளை பராமரிப்பது எப்படி?

சுண்டியிழுக்கும் உதடுகளை பராமரிப்பது எப்படி?

38

முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்னைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெது வெதுப்பாக மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்

லிப்ஸ்டிக் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந்து போடக்கூடாது. அவ்வாறு உபயோகித்தால் மற்ற பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமிகள் பரவும்.
தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். தரமில்லாத லிப்ஸ்
டிக்கை பயன்படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும்.

லிப்ஸ்டிக்போட பயன்படுத்தும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டும். லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக் கூடாது. அவ்வாறு செய்தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஸால் மட்டுமே லிப்ஸ்டிக் போடவேணடும். லிப்ஸ்டிக் போடும் முன்பு உதட்டில் ஐஸ் கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அத்துடன் தேன் கலந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கருவின் வெள்ளை
கருவுடன் அரை கரண்டி பாதாம் பவுடர் சிறிது பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட்டது போலவே இயற்கையிலே சிவப்பு நிறமாக இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதேபோல பல வண்ண நிறங்களில் உள்ள வாசலினையும் உபயோகிக் கலாம். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப்கிளாஸ் தடவும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.

லிப்ஸ்டிக் மேல்தான் லிப்கிளாஸ் தடவ வேண்டும். வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதட்டின் ஒரத்தில் புண்கள் வரும். அதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் உதடு சரியாகிவிடும்.