Home ஆண்கள் விந்தணுக்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

விந்தணுக்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

70

விந்தணு என்பது ஆணின் இனப்பெருக்க அணு. அது திரவ நிலையில் வெளித்தோன்றும். அந்த விந்தணுக்களைப் பற்றிய பல உண்மைகள் ஆண்களுக்கே தெரியாது. அவை பற்றி ஆண், பெண் இருவருமே தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல உள்ளன.

ஆண்கள் ஒருமுறை உடலுறவில் ஈடுபடும் போது, பல மில்லியன் கணக்கிலான விந்தணுக்கள் வெளிவரும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஒரு ஆணின் உடலில் ஒரு நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி நொடிக்கு ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் உற்பத்தி ஆவதால் தான், ஆணுக்கு ஒரு முறை விந்து வெளியேறும் போது, மில்லியன் கணக்கில் வெளியேற்றப்படுகினறன.

வெளியேறும் விந்தணுக்கள் பெண்களின் உடலுக்குள் செல்லும் போது, ஒரு சில மட்டுமே உயிரோடு நீந்திச் சென்று, பெண்களின் கருப்பையை அடைந்து கருவுறச் செய்கின்றன.

ஆனால் இறந்த விந்தணுக்களும் கருவுற உதவும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஆச்சரியமான விஷயமே. அதுமட்டுமல்ல. பெரும்பாலான விந்தணுக்கள் சிதைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

விந்தணுக்கள் பற்றி இன்னும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் உண்டு.

பொதுவாக ஆண்களுக்கு இரண்டு விதைப்பை இருக்கும். இரண்டு விதைப்பை இருந்தால் தான் ஆரோக்கியமானவர் என்று கருதுகிறோம். அது முற்றிலும் தவறான எண்ணம். ஒரு விதைப்பை இருப்பவரும் கூட, முழு ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

இந்த விதைப்பைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் எந்திரமாகச் செயல்படுகிறது. இரண்டு விதைப்பைகள் இருந்தால் தான் விந்தணுக்கள் உற்பத்தி செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு விதைப்பை இருந்தாலே ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யப்படுகிற நேரம் சற்று தாமதமாகும். அந்த வித்தியாசமும் நொடிகளில் மட்டுமே இருக்கும்.

பெண்களின் உடலுக்குள் பாய்ச்சப்படும் விந்தணுக்கள் 6 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை தங்கியிருக்கின்றன. ஆண் உடலில் இருந்து வெளியேறும் விந்தணுக்கள் x,y ஆகிய ஆண், பெண் குரோமோசோம்களைக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆரோக்கியமான ஆணுக்கும் உடலுறவும் சுய இன்பமும் அவசியமானதாகும். இல்லையேல், புராஸ்டெட் என்னும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அளவுக்கு அதிமாகவும் சுய இன்பத்தில் ஈடுபடுதல் கூடாது.

விந்தணுக்களின் உற்பத்தி கோடைகாலத்தில் குறைவாகவும் குளிர்காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதனால் ஆண்கள் கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

விந்தணு என்பது வெள்ளை நிற விந்து நீர்மத்தின் ஒரு பகுதி. பல விந்தணுக்கள் வெள்ளை நிற திரவத்துடன் கலந்து, விந்து நீர்மமாக வெளியேறுகிறது.

விந்து வெளியேறும் போது, பல விந்தணுக்கள் சிதைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு சிதைந்திருக்கும் விந்தணுக்களுக்கு இரண்டு தலையும் இரண்டு வாலும் இருக்கும்.

இந்த மாற்றங்களால் தான் பெரும்பாலான விந்தணுக்கள் கருப்பையை அடையும் முன் இறந்துவிடுகின்றன.