Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

உடல் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

21

உடல் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் போது ஒருசில விஷயங்களை தவிர்க்காவிட்டால் அவையே உடல் நலனுக்கு பங்கம் விளைவிக்க காரணமாகிவிடும்.

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. உடற்பயிற்சியின்போது ஒருசில விஷயங்களை தவிர்க்காவிட்டால் அவையே உடல் நலனுக்கு பங்கம் விளைவிக்க காரணமாகிவிடும்.

* உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை வெளியேறுவது தவிர்க்க முடியாதது. அடிக்கடி கைகளால் வியர்வையை துடைப்பதை தவிர்க்க வேண்டும்.

* அதிக வியர்வை வெளியேறும்போது மென்மையான டவல்களை கொண்டு துடைக்க வேண்டும். அடுத்தவர் களின் டவலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

* பெண்கள் உடற் பயிற்சி செய்யும்போது இடையூறு ஏற்படும் என்ற எண்ணத்தில் இறுக்கமாகவோ, தளர்த்தியோ கூந்தல் அலங்காரம் செய்யக்கூடாது. உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை கூந்தலில் படிந்து, முடி உதிர்வுக்கோ, முடி உடைவதற்கோ வழிவகுத்துவிடும். எண்ணெய் தேய்த்துக்கொண்டும் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

* மேக்கப் போட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு உடற்பயிற்சி செய்வதே நல்லது. இல்லாவிட்டால் அவை முகத்துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்தி வியர்வை வெளியேறுவதை தடுத்துவிடும். அதன் தாக்கமாக முகத்தில் பருக்கள் தோன்றவும், தோல் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

* உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாசனை திரவியங்களை உடலில் பூசுவதை தவிர்க்க வேண்டும். அவை வியர்வையில் கலந்து சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

* உடற்பயிற்சியின்போது மென்மையான மாய்ஸ்சரைசரும், ஆயில் ஜெல்லும் பயன்படுத்தலாம்.

* உடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் பருக வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

* உடற்பயிற்சி செய்து முடித்த உடனே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. ஏற்கனவே தலையில் வியர்வை படிந் திருக்கும் என்பதால் அதனை போக்க ஷாம்பு போட்டு குளிக்கலாம்.