குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இந்த அனுபவத்தை பெரும்பாலானோர் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, ஆற்றில், அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாமலேயே சிறுநீர் வருவதை எல்லோருமே உணர்ந்திருப்பார்கள்.
இப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம். குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒரு சில நன்மைகள் உள்ளன.
குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
உங்கள் கால்களில் சிறு கீறல்கள் அல்லது சிறு காயங்கள் இருந்தால், ஃபிரஷ்ஷாக வெளிவரும் சிறுநீர், காயங்களில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, வலி மற்றும் அங்குள்ள திசுக்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அலர்ஜிக்கு சிகிச்சையாகவும் பயன்படுகிறது. சரும அலர்ஜியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் பிஎச் அளவை சீராக வைத்திருக்கும்.
சிறுநீர் பாதங்களில் உள்ள பூஞ்சைத் தொற்றுகளை சரி செய்யும். பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் பட்டால், விரைவில் பூஞ்சை தொற்றுகள் சரியாகும்.