பெண்களின் அந்தரங்க பகுதியில் அவ்வப்போது லேசாக துர்நாற்றம் வருவது, இயல்பாக இருப்பது தான். ஆனால் சில சமயங்களில் அந்த துர்நாற்றம் மிக அதிகமாக இருக்கும்.
அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்தரங்கப் பகுதிகளில் வீசும் துர்நாற்றத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய் தொற்றுக்கள் இருக்கக்கூடும்.
ஆரோக்கியமான நிலையில் இருந்தால் அதன் பிஎச் அளவானது 4.5 ஆகும்.
பாக்டீரியாக்களின் தொற்று அதிகமாக இருப்பின் அதிலிருந்து வெளிப்படும் திரவமே துர்நாற்றத்திற்குக் காரணமாகிறது.
அழுகிய மீன் நாற்றம் போன்று இருந்தால் Vaginosis தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அரிப்புடன் கூடிய துர்நாற்றம் ஏற்பட்டால் அது நிச்சயம் ஈஸ்ட் தொற்றாகத் தான் இருக்கக்கூடும்.
சிறுநீர்ப் பாதையில் தொற்று இருந்தால், அமோனியா வாசனையைப் போன்று இருக்கும். இதை சரிசெய்ய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
இதுதவிர மாதவிலக்கு காலங்களின் போதும் பொதுவாகவே நாற்றம் இருக்கும், ஒருவேளை அதிகமாக இருக்கும்போது, அது இரும்புசத்தின் குறைபாடாகக்கூட இருக்கலாம்.