தான் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள். ஆனால் அதற்காக கண்ட கண்ட க்ரீம்களையும் வாங்கிப் போட்டு முகத்தை இன்னும் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க இதோ வீட்டிலேயே செய்துகொள்ளும் சிறுசிறு குறிப்புகள்…
ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி, முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து பாசிப்பயறு மாவு கொண்டு முகத்தை நன்கு கழுவுங்கள். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
குறிப்பாக, காலையில் கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ செல்லும் பெண்கள், இரவில் இதை செய்துவிட்டுப் படுத்துத் தூங்குங்கள். காலையில் உங்கள் முகம் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் தோன்றும். மேக்கப் போடவே தேவையில்லை.
முகத்தில் கருந்திட்டுகள், கரும்புள்ளிகள் போன்றவை இருந்தால், அடிக்கடி முகத்தில் எலுமிச்சைப் பழத்தை தேய்த்து மசாஜ் செய்தால், முகத்தில் மாசுக்கள் நீங்கும். அதோடு முகத்தில் தேவையற்ற முடிகள் ஏதேனும் இருந்தால் நீங்கி, முகம் பிளீச் செய்தது போல் ஆகிவிடும்.
வேப்பிலை, புதினா இரண்டையும் உலர வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை பாலில் குழைத்து, முகத்துக்கு தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவினால் முகம் மாசு மருவற்று பளிங்கு போல் இருக்கும்.
பூசணிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவிவர, முகத்துக்கு பளபளப்பும் நல்ல நிறமும் கிடைக்கும்.