Home பெண்கள் அழகு குறிப்பு Tamil X beauty care ஆண்களின் சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளுக்கான குறிப்புகள்

Tamil X beauty care ஆண்களின் சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளுக்கான குறிப்புகள்

37

சருமப் பராமரிப்புக்கு என்று எண்ணற்ற தயாரிப்புகள் கிடைக்கும் இக்காலத்தில், எவற்றை வாங்குவது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். ஆண்கள் பராமரிப்புக்காக வாங்க வேண்டிய முக்கியமான தயாரிப்புகள் பற்றியும் அவற்றை வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் விவரிக்க உள்ளோம்.

க்ளென்சர் (Cleanser)

முகத்தை சுத்தம் செய்யப் பயன்படும் ஃபேஷியல் க்ளென்சர்கள் சருமத்தின் எண்ணெய்ப்பசை, இறந்த செல்கள், மேக்கப், அழுக்கு மற்றும் பிற மாசுக்களை சருமத்தில் இருந்து அகற்றப் பயன்படுகின்றன.

இப்படி சுத்தம் செய்யும்போது, அந்தத் தயாரிப்பானது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் (சீபம்), கரும்புள்ளிகள் மற்றும் குருக்களை அகற்ற வேண்டும். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகச் செயல்படுகின்ற ஆண்களுக்கு இது மிகவும் முக்கியமாகும். இப்படிச் செய்வது சருமத்தில் உள்ள நுண்துளைகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கவும் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகளைப் போக்கவும் உதவும்.

பெரும்பாலான ஆண்கள் முகத்திற்கும் சோப்பைப் பயன்படுத்துவார்கள். எண்ணெய்ப்பசை உள்ள சருமம் கொண்ட ஆண்களுக்கு இது சரிப்பட்டு வரலாம், ஆனால் இயல்பான அல்லது வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு சோப்பைப் பயன்படுத்தினால், அது சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். மேலும், பெரும்பாலான சோப்புகளில் பயன்படுத்தப்படும் பெர்ஃபியூம்கள் ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மென்மையான க்ளென்சரைத் தேர்ந்தெடுக்கவும். அது முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் அது முகத்தின் சருமத்தில் இருக்கும் இயற்கையான சருமத் தடுப்பை அகற்றி சருமத்தை வறண்டுபோகச் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும், சருமத்தை சுத்தம் செய்யும்போது சருமத்தை ஊடுருவிச் செல்லக்கூடிய மாய்ஸ்டுரைஸர் அல்லது சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் தயாரிப்புகளைப் பயன்படுத்த சருமம் தயாராகும்.

நாளொன்றுக்கு காலை மாலை என்று இரண்டு முறை மட்டுமே முகத்தைக் கழுவினால் போதும்.

எக்ஸ்ஃபோலியேஷன் தயாரிப்புகள் (Exfoliation products)

எக்ஸ்ஃபோலியேஷன் என்பது சருமத்தின் மேல் அடுக்கில் (எப்பிடெர்மிஸ்) இருந்து, இறந்த செல்களை அகற்றுவதைக் குறிக்கும் சொல்லாகும். மேல் அடுக்கில் தோல் (மேல்தோல்) இருந்து இறந்த சரும செல்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். நமது சருமம் இயற்கையாகவே ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான இறந்த செல்களை அகற்றி உதிர்க்கிறது. ஆனால் முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கவும் மென்மையான சருமத்தைப் பெறவும் பலருக்கு எக்ஸ்ஃபோலியேஷன் செய்யும் தயாரிப்புகள் தேவைப்படும்.

தினமும் சருமத்தை சுத்தப்படுத்தினாலும், சருமத்திற்கு அடியிலும் நுண்துளைகளிலும் அழுக்கும் தூசிப் படலமும் படிந்துவிடும், இவை எண்ணெயுடன் கலந்து கரும்புள்ளிகளும் முகப்பருக்களும் உண்டாகலாம். முகத்தில் உள்ள இறந்த செல்கள் மேலும் மேலும் படிந்து, முகம் பொலிவிழந்து, நிறமிழந்து காணப்படலாம். எனவே, தினமும் சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை எக்ஸ்ஃபோலியேஷனும் செய்வது நல்லது.

இதைச் செய்வதால் இறந்த செல்கள் அகற்றப்படும், சிதைந்த சரும பாகங்கள் அகற்றப்படும், நுண்துளைகளில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும், சருமம் மென்மையாகும், சருமத்தின் பதம் மேம்படும், சருமம் பொலிவு கூடும், பார்க்க மென்மையான பொலிவான தோற்றம் பெறும்.

இறந்த செல்களை அகற்ற, எக்ஸ்ஃபோலியேஷன் ஸ்க்ரப்பை உங்கள் விரலில் அல்லது ஈரமான, மென்மையான வாஷ்க்ளாத்தில் எடுத்துக்கொண்டு முகம் முழுவதும் வட்ட வடிவப் போக்கில் மென்மையாகத் தேய்க்கவும். எக்ஸ்ஃபோலியேஷன் செய்த பிறகு, ஸ்க்ரப்பை வெதுவெதுப்பான அல்லது சற்று சூடான நீரில் அலசிப் பிழிந்து அதிலுள்ள ஈரத்தையும், முகத்திலிருந்து தேய்த்து எடுக்கப்பட்ட அழுக்கையும் வெளியேற்றவும் அதற்குப் பிறகு, முகத்தில் குளிர் நீரைத் தெளித்துக் கழுவவும், இதனால் நுண்துளைகள் மூடிக்கொள்ளும். பிறகு சுத்தமான, மென்மையான ஃபேஸ் டவல் கொண்டு முகத்தைத் துடைத்து உலரச் செய்யவும்.

இதை செய்வதால் சருமம் வறண்டு போய், சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இதைச் செய்தபிறகு இதற்குப் பிறகு மாய்ஸ்டுரைஸரைப் பயன்படுத்தவும், எக்ஸ்ஃபோலியேஷன் செய்யும்போது அளவுக்கு அதிகமாகச் செய்யக்கூடாது, அப்படிச் செய்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மீசை மற்றும் தாடி சீர்ப்படுத்தும் தயாரிப்புகள் (Moustache and Beard grooming products)

மீசையை ட்ரிம் செய்யும் முன்பு, முடிகளை நேராக்குவதற்கு சிறு பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தலாம்.

மீசை முடிகள் ஒழுங்கற்று வளர்ந்திருந்தால், முடிகளை ஒன்றாகச் சேர்த்துப் பிணைக்க மீசை மெழுகு பயன்படுத்தலாம், இதனால் மீசையை சீப்பு கொண்டு ஒழுங்கான வடிவத்திற்கு வார எளிதாக இருக்கும்.

தாடிக்கு, ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தலாம். தாடியை ஸ்டைல் செய்ய, சிறிதளவு ஸ்டைலிங் ஜெல் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு (Sun damage protection)

சூரிய ஒளியில் இருக்கும் UV கதிர்கள் நீண்ட நாட்கள் சருமத்தின் மீது பட்டால் சருமத்தை அவை சேதப்படுத்தலாம். எவ்வளவு அதிகமாக சூரிய ஒளி படும்படி இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிகமாக சருமம் சேதமடைந்து சுருக்கங்களும், முதுமைப் புள்ளிகளும், தளர்ந்த சருமமும் ஏற்படும். எனவே, சருமப் பாதுகாப்பிற்கு சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்துவது முக்கியமாகும்.

சன்ஸ்கிரீன் கொண்டுள்ள மாய்ஸ்டுரைசர்களை தினமும் பயன்படுத்துவதே, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். சூரிய பாதுகாப்புக் காரணி (SPF) 15 அல்லது 30 கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.

பல மாய்ஸ்டுரைசர்களில் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன. சூரியனால் சருமம் சேதமடைவதில், ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு வகிக்கிறது, ஆன்டிஆக்சிடண்டுகள் (ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் பொருட்கள்) சருமத்திற்கு நல்ல பலன்களை அளிக்கலாம்.

வழுக்கையான சிறு பகுதிகள், தலைமுடிப் பகுதியின் எல்லை படிப்படியாக சுருங்குவது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், சூரிய ஒளி படும்படியாக உள்ள தலையின் இந்தப் பகுதிகளையும் குறைவான முடி கொண்ட பகுதிகளையும் சேதமடையாமல் தடுக்க, SPF பாதுகாப்பு கொண்ட சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது ஹேர் ஸ்ப்ரே அல்லது ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்.

சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில், சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளின் பங்கு முக்கியமானதாகும். உங்கள் சருமம் என்ன வகையானது என்பதைத் தெரிந்துகொள்வதும், உங்களுக்கேற்ற சரியான தயாரிப்புகளைத் தேர்வு செய்வதும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதும், சுத்தமான, மென்மையான, இளமையான சருமத்தைப் பெற உதவும்.