விரைச்சிரை முறுக்கம் என்றால் என்ன? (What is testicular torsion?)
விரையின் சுழற்சியால் விரைக்குச் செல்லும் நாள நரம்புக் குழாயில் முறுக்கம் ஏற்படுவதே விரைச்சிரை முறுக்கம் உண்டாக வழிவகுக்கிறது. இரத்தம் ஓட்டம் துண்டிக்கப்படுவதால் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்படுகிறது.விரைச்சிரை முறுக்கத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. விரைச்சிரை முறுக்கம் எந்த வயதிலும் ஏற்படும் என்றாலும்கூட, 12-16 வயதுள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
காரணங்கள் மற்றும் அபாயங்கள் (Causes and Risk Factors)
காரணங்கள் (Causes)
விரைச்சிரை முறுக்கமானது, பொதுவாக ஆண்களின் விதைப்பையில் உள்ள குறைபாடான இணைப்புத் திசுக்களால் ஏற்படுகிறது. காயம் அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளினால் விரைச்சிரை முறுக்கம் ஏற்படும். சில நேரங்களில், எந்தவித காரணமுமின்றியும் விரைச்சிரை முறுக்கம் ஏற்படலாம்.
விரையின் சுழற்சியானது விரைக்குச் செல்லும் நாள நரம்புக் குழாயை முறுக்குகிறது. நாள நரம்புக் குழாயானது அடிவயிற்றிலிருந்து விரைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாயாகும். இந்தக் குழாயில் உண்டாகும் பல முறுக்குகள் விதைப்பைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை முற்றிலும் துண்டித்து, விதைப்பை சேதப்படுத்துகின்றன.
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (Symptoms and Signs)
பெரும்பாலும் விரைச்சிரை முறுக்கத்தை அனுபவிக்கும் இளம் சிறுவர்கள், இரவிலோ அல்லது காலையிலோ விதைப்பையில் கடுமையான வலியுடன் எழுவர்.
விரைச்சிரை முறுக்கத்தின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:
இடுப்புத்தொடை நரம்பில் தீடிரென கடுமையான வலி
அடிவயிற்றில் வலி
வாந்தி, குமட்டல்
இடுப்புதொடை நரம்பு வீக்கம்
சிறுநீர் கழிக்கும்போது வலி
நோய் கண்டறிதல் (Diagnosis)
கவட்டை, அடிவயிறு, விந்தகம் மற்றும் விதைப்பை ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலமாக விரைச்சிரை முறுக்கத்தை மருத்துவர் கண்டறிவார்.விந்தகத்தில் வீக்கமும், வலியுனர்வும் கண்டறியப்படலாம். பிற சோதனைகள் பின்வருமாறு:
டாப்ளர் அல்ட்ராசவுண்ட்: இது இரத்த ஓட்டத்தை சரிபார்ப்பதற்கான சோதனையாகும்.முழுமையான விரைச்சிரை முறுக்கம் இருக்கும்போது, இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும்.
சிறுநீர் சோதனை: நோய்த்தொற்றிற்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை சோதிக்க இந்த சோதனை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சை: மற்ற நிலைமைகளை சரி செய்யவும், விரைச்சிரை முறுக்கத்தை சரி செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.
வலி பல மணி நேரங்கள் நீடித்து விரைச்சிரை முறுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றும்போதும், விதைப்பையை காப்பாற்றுதல் மிகவும் முக்கியம் என்ற தருணத்தில்தான் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சிகிச்சை மற்றும் தடுத்தல் (Treatment and Prevention)
சிகிச்சை (Treatment)
விரைச்சிரை முறுக்கத்தை சரிசெய்ய பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. விரைச்சிரை முறுக்கத்திற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதும், அதை சரிசெய்வதற்கான உடனடித் தீர்வு அறுவை சிகிச்சையே ஆகும். எதிர்கால ஆபத்தை தவிர்க்க விரைச்சிரை முறுக்கால் பாதிக்கப்படாத மற்றொரு விந்தகத்திற்கும் அதே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சில நேரங்களில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து விரைச்சிரை முறுக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, மருத்துவர் தனது கையாலேயே திருகு பிரித்தலை (விந்தகத்தின் முறுக்கைப் பிரித்தல்) செய்வார்.சரியான நேரத்தில் (ஆறு மணி நேரத்திற்குள்) சிகிச்சைப் பெறுதல் விரையைக் காப்பாற்ற உதவும்.கடும் சேதமடைந்த விரை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும்.
தடுத்தல் (Prevention)
விதைப்பையில் காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் விரைச்சிரை முறுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அனைத்தும் தடுக்கக்கூடிய சம்பவங்கள் அல்ல.
விதைப்பையில் விரைச் சுழற்சி எற்படுதவதற்கான மரபியல் குணவியல்பு கொண்ட நபர்கள், அறுவை சிகிச்சை மூலம் தங்களின் விதைகளை விதைப்பையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
சிக்கல்கள் (Complications)
விரைச்சிரை முறுக்கத்தால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:
சுருக்கம் அல்லது விரை சேதம்: விரைச்சிரை முறுக்கமானது விரையைச் சேதப்படுத்தும் அல்லது விரையின் நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும்.அதிகம் சேதமடைந்த விதைகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும்.
கருவுராமை: தந்தையாகும் திறனை அடைய முடியாமல் போகும்.
விதைப்பை மற்றும் விதையில் உண்டாகும் நோய்த்தொற்று விரைச்சிரை முறுக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
விரையில் தற்காலிகமான வலி இருந்தால்கூட மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.
எச்சரிக்கை (Red Flags)
விரையில் கணிக்கமுடியாத தீவிர வலி இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.