ஆண்களுக்கு தாங்கள் ஃபிட்டாக இருக்கிறோமோ, குறிப்பாக அந்த விஷயத்தில் தங்களால் சிறப்பாக செயல்பட முடியுமா? ஒரு பெண்ணை திருப்திப்படுத்திவிட முடியுமா போன்ற சந்தேகங்கள் வந்துபோவதுண்டு.
சிலர் விந்தணுக்கள் வீரியமாக இல்லை, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாக கவலை கொள்கிறார்கள். அவர்களுக்கு மிக எளிமையாக விந்தணுக்களை வீரியப்படுத்தும் மருந்து நம்முடைய வீட்டிலேயே இருக்கிறது என்பது தெரிவதில்லை.
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு.
தாது விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும், தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும்.
காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். இதை குறைந்தது 48 நாள் (ஒரு மண்டலம்) சாப்பிட வேண்டியது அவசியம்.
இது விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும். ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் நல்ல மாற்றத்தை உணர முடியும்.
அதேபோல், கருவேலம் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைத்தன்மை பெருகும்.